எல்லாத்துக்கும் ஆர்க்யூமென்ட்.. அனிதாவை ஓவர்டேக் செய்யும் தர்ஷனின் முன்னாள் காதலி.. முடியலடா.. சாமி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகை சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸை டார்க்கெட் செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள், யாரையாவது டார்கெட் செய்து சண்டை போட்டால் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் எளிமையாக ரீச் ஆகிவிடலாம் என்று எண்ணியுள்ளனர்.
இதனால் தினமும் யாராவது ஒருவர் யாரையாவது ஒருவரை வம்பிழுத்து வருகின்றனர். இந்த ஸ்ட்ராட்டர்ஜியை பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள்தான் பின்பற்றி வருகின்றனர்.

அடுத்தடுத்த புரமோக்கள்
அந்த வகையில் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே அனிதா சம்பத் ஆட்டத்தை ஆரம்பித்தார். சுரேஷ் சக்கரவர்த்தியை வச்சு செய்தார். அவர் புரமோவில் வர ஆசைப்படுவதாக கூறி அடுத்தடுத்த புரமோக்களில் இடம் பிடித்தார் அனிதா சம்பத்.

சனம் ஆர்க்யூமென்ட்
அதன் பிறகு, அந்த பணியை டேக் ஓவர் செய்த சனம் ஷெட்டி நடிகை ரேகாவை டார்க்கெட் செய்தார். சாதாரண விஷயத்துக்கெல்லாம் கடுப்பேற்றும் வகையில் ஆர்க்யூமென்ட் செய்து வருகிறார். ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு நேற்று ரேகாவை வறுத்தெடுத்தார்.

ஜெர்ம்ஸ் வரும்
இந்நிலையில் இன்று சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை டார்கெட் செய்துள்ளார். ஜூஸ் பிழியும் போது கொஞ்சம் கூட ஹைஜீனிக் இல்லை என்று கூறி அவரை இன்சல்ட் செய்தார். கையில் ஜெர்ம்ஸ்லாம் ஜூஸில் படும் என்று மூஞ்சில் அடித்தார் போல் கூறினார்.

டுப்பாக்கூர் ஷோ
இதனால் கடுப்பான பாலாஜி முருகதாஸ், அப்படியென்றால் யாரும் குடிக்காதீர்கள் என்றார். ஆனால் அதனை மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் ஏற்கவில்லை. நோஸ்க்கட்டானது சனம் ஷெட்டிக்கு. தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசும் போது, டுப்பாக்கூர் ஃபேஷன் ஷோ என்று பாலா கூற அங்கிருந்து வெளியேறினார் சனம்.

பாலாவுக்கு அட்வைஸ்
பின்னர் டைனிங் ஹாலில் எப்படி அப்படி சொல்லலாம் என கூறி மீண்டும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு மட்டுமின்றி, உங்களுக்கு முன்னாள் இருந்து நான் மாடலிங்கில் இருக்கிறேன். யாரைப்பற்றியும் அப்படி பேசாதீர்கள் என அட்வைஸ் செய்கிறார்.

இரிட்டேட் ஆகுது
சனம் ஷெட்டி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் சனம் ஷெட்டிக்கு இன்றைய டார்கெட் பாலாஜி முருகதாஸ்தான் என கிண்டலத்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த முறை உன்னை தான் வெளியே அனுப்ப வேண்டும் இரிட்டேட் ஆகுது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











