For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹேட்ஃபுல் பேச்சுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு.. மீரா மிதுன் கைது.. சந்தோஷத்தில் சனம் ஷெட்டி!

  |

  சென்னை: நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி போட்டிருக்கும் ட்வீட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

  பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்னை பலரும் அவாயிட் பண்ணாங்க… கண்கலங்கிய அறந்தாங்கி நிஷா !பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் என்னை பலரும் அவாயிட் பண்ணாங்க… கண்கலங்கிய அறந்தாங்கி நிஷா !

  தன்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என சவால் விட்ட மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் நேற்று கைது செய்தனர்.

  தற்கொலை மிரட்டல்

  தற்கொலை மிரட்டல்

  இதற்கு முன்பே பலமுறை தான் தற்கொலை செய்துக் கொண்டு செத்துவிடுவேன் என மிரட்டிய மீரா மிதுன், போலீசார் கைது செய்யும் போதும் ஒருத்தர் கை என் மேல பட்டாலும் இப்படியே குத்திக்கிட்டு செத்துடுவேன் என அட்டகாசம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

  முதல்வரே பிரதமரே

  முதல்வரே பிரதமரே

  மேலும், ஒரு பொண்ணுக்கு இப்படியெல்லாம் நடக்கணுமா. என்னை துன்புறுத்துறாங்க என போலீசார் கைது செய்ய வந்த நிலையில், தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்த படியே பேசிய மீரா மிதுன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி தன்னை காப்பாற்ற வேண்டும் என குமுறி அழுதார்.

  தொடர்ந்து கூச்சல்

  தொடர்ந்து கூச்சல்

  கேரளாவின் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை அதிரடியாக கைது செய்த சைபர் கிரைம் போலீசார் சென்னை காவலர் ஆணையத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்திற்கு அவரை கொண்டு சென்றனர். அப்போது மீடியாவை பார்த்த மீரா மிதுன் போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதாக கத்தி கூச்சலிட்டார்.

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  ரசிகர்கள் கொண்டாட்டம்

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குறித்து மிகவும் இழிவாக பேசிய போதே மீரா மிதுன் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. பின்னர் கைதுக்கு பயந்து ஒரே அடியாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும், ரசிகர்களின் கோபம் தணியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சாதிய ரீதியிலான சர்ச்சை கருத்தை பேசிய நிலையில், மீரா மிதுன் கைது செய்யப்பட்டதை அறிந்த சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது கைதை கொண்டாடி வருகின்றனர்.

  பிரபலங்கள் கருத்து

  பிரபலங்கள் கருத்து

  நெட்டிசன்கள் மட்டுமின்றி சில சினிமா பிரபலங்களும் சோஷியல் மீடியா இன்ஃப்லுயன்சர்களும் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டதற்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குநர் நவீன் மீரா மிதுனின் கைதை வரவேற்று இருந்தார். ஜோ மைக்கேல் தப்பு பண்ணினா தண்டனை அனுபவிக்கணும் என ட்வீட் போட்டு இருந்தார்.

  சனம் ஷெட்டியும் விடல

  சனம் ஷெட்டியும் விடல

  பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட மீரா மிதுன் ஏகப்பட்ட ஹேட் ஸ்பீச்களை தொடர்ந்து பேசி பலரையும் காயப்படுத்தி வந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது கைது தொடர்பாக பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  காவல் துறைக்கு நன்றி

  காவல் துறைக்கு நன்றி

  சரியான நேரத்தில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல் துறை மற்றும் சைபர் கிரைம் போலீசாருக்கு நன்றி என ட்வீட் போட்ட நடிகை சனம் ஷெட்டி, சில ஆண்டுகளாக சகித்துக் கொண்டிருந்த அத்தனை கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ட்வீட் செய்திருக்கிறார்.

  வொர்த் இல்ல

  வொர்த் இல்ல

  பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டியின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் டார்லு இந்த விஷயத்தை கண்டுகாதீங்க.. அவ அந்த அளவுக்கு வொர்த் இல்லை என சனம் ஷெட்டிக்கு சேஃப்டி அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss fame actress Sanam Shetty thanks Tamil Nadu Police and Cyber Crime Police for arresting Meera Mithun.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X