சவுந்தர்யா தான் ஸ்கேமே.. 17 லட்சம் எப்படி போகும்.. சந்தேகத்தை கிளப்பிய சனம் ஷெட்டி.. ஆதாரம் இதோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள சவுந்தர்யா தனக்கு ஆர்பிஐ மூலமாக போன் பண்றோம் என சொல்லி 17 லட்சத்தை ஏமாற்றிவிட்டனர் என்றும் தனது வீட்டுக்கே அது தெரியாது என்றும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுந்தர்யா சொல்வது சுத்தமான உருட்டு என சோஷியல் மீடியாவில் சனம் ஷெட்டி ட்வீட் போட சவுந்தர்யா தரப்பில் இருந்து ஆதாரம் வெளியாகி பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆன்லைனில் ஏகப்பட்ட மோசடிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை டார்கெட் செய்து ஏமாற்றி வருகின்றனர். சமீப காலமாக ஆர்பிஐ அதிகாரி பேசுகிறோம் என்றும் சிபிஐ அதிகாரி பேசுகிறோம் என்றும் உங்கள் மொபைல் போனை இல்லீகல் பிசினஸுக்காக தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். நீங்க அதற்கு உடந்தை அதற்காக உங்களை கைது செய்யப் போகிறோம் என மிரட்டுகின்றனர்.

பின்னர், சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து முடிந்த அளவுக்கு பணத்தை கறந்து விடுகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சைபர் கிரைமில் சொல்ல வேண்டும் என போலீஸார் விழிப்புணர்வு அளித்தாலும் அது அனைவரையும் சென்று சேரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
17 லட்சத்தை பறிகொடுத்த சவுந்தர்யா: போன் மூலம் பயமுறுத்தி தன்னுடைய தகவல்கள், அந்தரங்க விஷயங்களை எல்லாம் லீக் செய்து விடுவோம் என மிரட்டி 17 லட்சம் ரூபாய் வரை பிக் பாஸ் போட்டியாளர் சவுந்தர்யாவிடம் ஏமாற்றியுள்ளனர். அதுகுறித்த கதையை பிக் பாஸ் வீட்டில் அவர் சொல்ல ஜாக்குலின் எல்லாம் என்னிடம் கொடுத்து இருக்கலாமே என்றார். சோஷியல் மீடியாவில் சவுந்தர்யா ஏமாந்த கதையே உருட்டு என ரசிகர்களை தாண்டி பிரபலங்களே ட்வீட் போட ஆரம்பித்துள்ளனர்.

சனம் ஷெட்டி சாடல்: பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான சனம் ஷெட்டி தொடர்ந்து பிக் பாஸ் போட்டிகளை விமர்சித்து வருகிறார். சவுந்தர்யாவை யாரும் ஸ்கேம் பண்ணவில்லை. சவுந்தர்யாவே ஒரு ஸ்கேம் தான். தற்போது அவரது பொய்யான முகம் அம்பலமாகி விட்டது. 17 லட்சத்தை இழந்துவிட்டு யாராவது போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்காமல் இருப்பார்களா? என ட்வீட் போட்டு விளாசினார்.

எஃப்ஐஆர் காப்பி: உடனடியாக சவுந்தர்யா சொன்னது ஒன்றும் பொய் அல்ல. அவர் உண்மையிலேயே ஏமாந்துள்ளார். அதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என எஃப்ஐஆர் காப்பியை சவுந்தர்யாவின் டீம் அவரது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டு சனம் ஷெட்டிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











