இப்போ ஆரி தான் மாஸ்.. வச்சு டேமேஜ் பண்ணனும்.. பிளான் போட்டு சண்டை போடும் சனம்.. முதல்ல துரத்தணும்!
சென்னை: ஒரு கேப்டனா கிச்சன் டீம் கேப்டன் கிட்ட வந்து, யாரு சாப்பாட கொட்டுனான்னு கேட்டதுக்கு உடனே இதுதான் சாக்கு என ஒரு சண்டையை கிளப்பிட்டாங்க சனம் ஷெட்டி.
எப்போது எல்லாம் யார் டாப்பில் வருகிறார்களோ, அவர்களுடன் சரிக்கு சமமாக நின்று சண்டை போட்டு ஸ்க்ரீனில் தெரிய நல்லாவே நடித்து வருகிறார் சனம்.
பாலாவுடன் இருக்கும் கோபத்தை அப்படியே ஆரி மீது காட்டி அவருடன் சண்டையை ஆரம்பித்து விட்டார்.

பாலாவுக்கு அம்மாவான சனம்
பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸுக்கு அம்மாவா நடிக்கணும் என்கிற தர்ம சங்கடத்திற்கு ஆளானார் சனம் ஷெட்டி. தங்கச்சியா நடிக்க சொன்னதுக்கு, ஷிவானியே ஜாலியா பாலா அண்ணா, என வழிந்து வருகிறார் உனக்கு என்னம்மா பிரச்சனை என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் என்ன சொன்னார்
கடந்த வார இறுதி நாட்களில் தான் பாலா பற்றி எந்த அளவுக்கு போட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு போட்டுக் கொடுத்து பிரபலமானார் சனம் ஷெட்டி. இந்த டாஸ்க்கின் போது எந்த பிரச்சனையும் ஆரம்பிக்காமல் இருக்கும் போதே, அவரே தன்னால் அம்மாவா நடிக்க முடியாது பிக் பாஸ், கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க எனக் கூறி சென்று வந்தார். இந்த முறை என்ன பஞ்சாயத்து கிளப்பினார் என்றே தெரியவில்லை அந்த சீனையே காட்டவில்லை.

ஆரியை அசிங்கப்படுத்த பிளான்
சுரேஷ் சக்கரவர்த்தி விளையாட்டாக அடிச்சதை வைத்து, பெரிய பூகம்பத்தை கிளப்பினார். பாலாஜியுடன் டுபாக்கூர், தறுதலை, அரை எலுமிச்சை பழம் என நினைக்கும் போதெல்லாம் சண்டை போட்டு வருகிறார். இப்போ இந்த வாரம் தலைவரா இருக்கிற ஆரியை வேண்டுமென்றே அசிங்கப்படுத்த பிளான் போட்டுவிட்டார்.

சாப்பாட்டை கொட்டுனீங்களா
சனம் ஷெட்டி டாஸ்க்கில் கவனம் செலுத்தாமல், கிச்சன் டீமில் பொறுப்பாக வேலை பார்ப்பது போல நடித்துக் கொண்டிருந்தார். அங்கே வந்த மிஸ்டர் பர்ஃபெக்ட் ஆரி, குப்பைத் தொட்டியில் சாப்பாட்டை யார் கொட்டுனது? எனக் கேட்டார். அதற்கு யார் வேணா கொட்டிருக்கலாம். அது நானா கூட இருக்கலாம் என தெறி விஜய் ரேஞ்சுக்கு பேசினார்.

வெடித்தது சண்டை
நானா கூட இருக்கலாம்னா என்ன அர்த்தம், நீங்க கொட்டுனீங்கன்னு ஓப்பனா சொல்லுங்க என ஆரி பிடி பிடி என பிடிக்க, கொளுத்திப் போட்டது வீண் போகல, நல்லா வெடிக்கத் தொடங்கிடுச்சு, இதுதான் சமயம் என கத்திக் கூப்பாடு போடத் தொடங்கி விட்டார் சனம் ஷெட்டி. போன வாரம் அவருக்கு ஆதரவாக நின்ற ஆரியையே இப்போ அசிங்கப்படுத்த காரணம் அவரது கேவலமான கேம் ஸ்ட்ராட்டர்ஜி தான் என்றும் சனம் ரொம்ப விஷம் என்றும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

அர்ச்சனாவிடம் அழுது புலம்பி
நீங்க மட்டுமே பர்ஃபெக்ட் கிடையாது, நானும் பர்ஃபெக்ட் தான் என சம்மந்தம் இல்லாமல் சண்டையை பெரிதாக்கிய சனம் ஷெட்டி, அர்ச்சனா பாட்டியிடம் போய் உட்கார்ந்து கொண்டு அழத் தொடங்கினார். சனம்க்கு ஆரி கேட்டது பிரச்சனை இல்லை. பாலாவுக்கு அம்மாவா நடிச்சுத் தான் ஆகணும் என பிக் பாஸ் மந்திரிச்சி விட்டுருப்பார் அதுதான் பிரச்சனை.


Click it and Unblock the Notifications











