Sanchana Natarajan - காதலரை அறிமுகப்படுத்திய சஞ்சனா நடராஜன்.. ஜிகர்தண்டா 2 நடிகையின் செம சாய்ஸ்!

சென்னை: நோட்டா, சார்பட்டா பரம்பரை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் சஞ்சனா நடராஜன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பல நடிகைகள் காதலர்களுடனும் திருமணம் செய்துக் கொண்ட கணவருடனும் சோலோவாகவும் காதலர் தின போஸ்ட்டுகளை இன்ஸ்டாகிராமில் அடுக்கி உள்ளனர். இந்நிலையில், சஞ்சனா நடராஜனும் தனது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

Sanchana Natarajan introduces her lover on Valentines Day

சஞ்சனா நடராஜன்: 2014ல் வெளியான நெருங்கி வா முத்தமிடாதே படம் தான் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படம். இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் உடன் பாக்ஸிங் மாணவியாக நடித்திருந்தார் சஞ்சனா நடராஜன். அதன் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனிலும் இவரே நடித்திருந்தார். 2018ல் வெளியான விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படத்தில் எதிர்கட்சி தலைவரின் மகளாக நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 2.0, கேம் ஓவர், ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட பாடலுக்கு மணப்பெண்ணாக நடனமாடியிருந்தார்.

Sanchana Natarajan introduces her lover on Valentines Day

எஸ்.ஜே. சூர்யா ஜோடி: சார்பட்டா பரம்பரை படத்தில் லக்‌ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சனா நடராஜன் மலையாளத்தில் டியர் ஃபிரெண்ட் எனும் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கடைசியில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக போர் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Sanchana Natarajan introduces her lover on Valentines Day

இவர் தான் காதலர்: காதலர் தினத்தை முன்னிட்டு அபிஷேக் ராஜா தனது புதிய காதலியை அறிமுகப்படுத்திய நிலையில், சஞ்சனா நடராஜன் தனது காதலர் பால் என்பவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி போட்டோவை வெளியிட்டு அறிமுகப்படுத்தி உள்ளார். கொரியோகிராஃபராகவும் குறும்படங்களில் நடித்து வருபவருமான பால் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார் சஞ்சனா நடராஜன். இவரும் சிங்கிள் இல்லையா என அப்செட்டான சில ரசிகர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அன்ஃபாலோ செய்து விட்டு கிளம்பி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X