பச்சைக் கலர் புடவையில்.. பச்சக்குன்னு ஒரு சிரிப்பு... திணறடிக்கும் சஞ்சனா!
சென்னை : கேம் ஓவர், ஜகமே தந்திரம், சல்பேட்டா பட நடிகை சஞ்சனா நடராஜன் சேலையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நெருங்கிவா முத்தமிட படத்தின் கதாநாயகியின் தோழியாக முதன் முதலா தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் ரசிகர்களுக்கு
இவர் மாதவன் நடிப்பில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இறுதிச்சுற்று படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார். இப்படம் தெலுங்கிலும் மற்றும் இந்தியிலும் மொழி ரீமேக் செய்யப்பட்டது.

நோட்டாவில்
மாடலான சஞ்சனா நடராஜன் நோட்டா படத்தின் மூலமே நாம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருப்பார். ஆனால், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதற்கு மாறாக உள்ளது.

அழகாக புன்னகைத்து
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், சாதாரண புடவையில் எந்த வித மேக்கப்பும் இல்லாமல் சுவரின் ஓரம் சாய்ந்து இயல்பாக அழகா புன்னகைத்துள்ளார். இவர் பதிவிட்டுள்ள போட்டோசூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இணையதள படத்தில்
தற்போது இவர் நோட்டா, ஜகமே தந்திரம், கேம் ஓவர். சல்பேட்டா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். அஷ் ஐ ம் ஸபரிங் ஃப்ரம் காதல் என்ற ஒரு இணையத்தள படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











