அந்தி சாயும் நேரம் .. புடவையில் செய்த மாயம்.. அசத்திய நோட்டா நாயகி !
சென்னை : நோட்டா நாயகி சஞ்சனா நடராஜன் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
மாடலான சஞ்சனா நடராஜன் நோட்டா படத்தின் மூலமே நாம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சஞ்சனா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவே வைத்து இருப்பார். ஆனால், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அதற்கு மாறாக உள்ளது.

வீட்டு மொட்டை மாடியில் சாதாரண உடையில் எந்த வித மேக்கப்பும் இல்லாமல் இயல்பாக போட்டோசூட் செய்துள்ளார். சஞ்சனா பதிவேற்றியுள்ள புகைப்படத்தில், எந்த ஆடம்பர ஆடை அணியாமல் , மிக இயல்பாக மஞ்சள் புடவையுடன் அழகான செயல்களை புகைப்படமாக பதிவு செய்துள்ளார். அந்தி சாயும் நேரத்தில் இவர் எடுத்துள்ள புகைப்படம் அவரின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
இந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ள சஞ்சனா 'ஜிப்ஸி' படத்தில் வரும் 'மனமெங்கும் மாய ஊஞ்சல்' பாட்டில் வரும் வரிகளான காற்றிலே சிறகை நாம் விரித்தால் துளி ஆகாதோ பூமி வெளியெல்லாம் காதலால் நிறைந்தால் அதற்கீடேது சாமி என்ற உணர்வுள்ள வரிகளையும் கேப்ஷனாக கொடுத்து தான் உணர்வதை புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களையும் உணரவைத்துள்ளார்.
மாடலான சஞ்சனா நடராஜன் அதிகபடியான போட்டோசூட்டை செய்து வருவபர். தற்போது இவர் மஞ்சள் நிற புடவையில் எடுத்துள்ள இயல்பான புகைப்படங்கள் மனதை உருக்கி விட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதுவரை சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சஞ்சனா நோட்டா படத்தின் மூலமாகவும் இணைய தொடரான 'அஸ் ஐ ஆம் சஃபரிங் ஃப்ரெம் காதல்' மூலமாகவும் பிரபலமடைந்தார். இவர் ஷங்கரின் 2.0 படத்திலும் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். மேலும் ஷங்கரின் பாய்ஸ் 2 படத்தில் இவர் நாயகியாக தேர்வாகியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை தவிர்த்து வேறு எதை பற்றியும் அப்டேட் இதுவரையில் வரவில்லை .
சஞ்சனா மற்ற மாடல்களை போல இணையத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். தனது ரசிகர்களுக்காக எப்போதும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏதேனும் தனது செயல்களை பகிர்ந்தாவது உற்சாகப்படுத்தி விடுவார். தற்போது சஞ்சனா கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











