twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திய நைட்டிங்கேலுக்கு மரியாதை... மணற்சிற்ப கலைஞரின் வேற லெவல் சிற்பம்

    |

    புவனேஸ்வர் : இந்திய நைட்டிங்கேல் என்று போற்றப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் காலமானார்.

    லதா மங்கேஷ்கருக்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் ஏராளமான பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3!சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பூஜை.. உருவாகிறதா கலகலப்பு 3!

    இந்நிலையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் தன்னுடைய ஸ்டைலில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    பாடகி லதா மங்கேஷ்கர்

    பாடகி லதா மங்கேஷ்கர்

    பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இந்திய அளவில் சிறப்பான பெயரை பெற்றவர். தன்னுடைய 92வது வயதிலும் அனைவராலும் விரும்பப்பட்ட அவர் தன்னுடைய வாழ்நாளில் இந்திய மொழிகளில் 30,000 பாடல்களை பாடியுள்ளார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடியுள்ளார்.

    காலமான லதா மங்கேஷ்கர்

    காலமான லதா மங்கேஷ்கர்

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமும் நேரிலும் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் இரங்கல்

    பிரதமர் இரங்கல்

    நேற்றைய தினம் லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல் செய்திகளை சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டனர்.

    மணற்சிற்பம் மூலம் அஞ்சலி

    மணற்சிற்பம் மூலம் அஞ்சலி

    இந்நிலையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் தனது ஸ்டைலில் லதா மங்கேஷ்கருக்கு தனது இரங்கலை பதிவிட்டார். ஒடிசாவின் பூரி கடற்கரையில் அவர் லதா மங்கேஷ்கரின் மணற் சிற்பத்தை வடித்து தனது அஞ்சலியை பதிவிட்டார். மேலும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    லதா மங்கேஷ்கர் மறைவு பேரிழப்பு… உருகி ட்வீட் போட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!
    இந்தியாவின் நைட்டிங்கேல்

    இந்தியாவின் நைட்டிங்கேல்

    இந்தியாவின் நைட்டிங்கேலுக்கு தன்னுடைய மணற்சிற்பம் மூலம் தான் அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மணற்சிற்ப புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    English summary
    Sand Artist Sudarsan Pattnaik made Sand sculpture for tribute to Lata Mangeshkar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X