Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2
Recommended Video
சென்னை: சண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Yes finally got the approval fm #Tfpc. #Sandakozhi2 N #pandemkodi2 all set for a grand worldwide release simultaneously in both languages on #oct18th. Pooja holidays.single track soon.#penmedia @LycaProductions @KeerthyOfficial @varusarath @dirlingusam @thisisysr @SonyMusicSouth pic.twitter.com/ZhHbHfyLw5
— Vishal (@VishalKOfficial) July 9, 2018
பிஎஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளிவந்த இரும்புத்திரை திரைப்படத்திற்கு பிறகு தற்போது சண்டக்கோழி -2 பட ரிலீசுக்கு தயாராகிவிட்டார் விஷால். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்துள்ளார் விஷால்.
விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடித்துள்ளார். விஷால் ராஜ்கிரன் காம்போ அப்படியே உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், ஆயுதபூஜை நாளான அக்டோபர் 18-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.
பெரிய படங்களுக்கு எளிதில் ரிலீஸ் தேதி கிடைத்துவிடுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரிலீஸ் தேதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முன்கூட்டியே கடிதம் எழுதி அனுமதி வாங்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த புதிய விதிமுறையை பின்பற்றியே நாங்கள் சண்டக்கோழி 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்துள்ளோம் என்பதை நிரூபிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின், பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதல் பெற்ற கடிதத்தை விஷால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன், மிகச்சரியான திட்டம், இந்த வருடத்தில் வெளிவரும் எல்லா படங்களுக்கும் இதை கட்டாயமாக்க வேண்டும். அப்போதுதான் விதிமீறல்கள் நடக்காது. உங்களால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும் என்று ரீட்வீட் செய்துள்ளார்.
Superb planning @VishalKOfficial sir. We need to make it compulsory for all films coming in this year so that no 'gate crashing' by anyone sir. Only you, a fair leader, can ensure this for #TFPC 💐💐💐👍👍 https://t.co/9NcA6KJ9Du
— Dhananjayan BOFTA (@Dhananjayang) July 9, 2018
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!