விஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல!
Recommended Video

சண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் கிழிய விட்ட லிங்குசாமி வீடியோ
சென்னை: சண்டக்கோழி 3 திரைப்படம் ஆரம்பிக்கப்படும் என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
விஷால் மற்றும் லிங்குசாமியின் திரைவாழ்க்கையில் தங்க முட்டையிடும் வாத்தாக அமைந்த படம் சண்டக்கோழி. தற்போது சண்டக்கோழி 2 ரிலீஸாக உள்ளது.

பதிமூன்று வருடங்களுக்கு பிறகு சண்டக்கோழி 2 வெளிவருகிறது என்றாலும் பறந்து அடிக்கும் வலுவான கோழியாக தயாராகியுள்ளது. அதேபோல் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, சண்டக்கோழி 2 திரைப்படம் ரிலீசாகி ஆறு மாதங்களுக்குள் சண்டக்கோழி 3 திரைப்பட வேலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி, ஹரீஷ் பரேடி மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 அக்டோபர் 18ம் தேதி வெளியாக உள்ளது.
Comments
vishal keerthi suresh varalakshmi chennai madurai cinema news விஷால் லிங்குசாமி கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி சென்னை மதுரை சினிமா செய்திகள்


Click it and Unblock the Notifications