twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்..பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

    By
    |

    பெங்களூர்: பிரபல காமெடி நடிகர் மாரடைப்பு காரணமாகத் திடீரென மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல கன்னட காமெடி நடிகர் மைக்கேல் மது. கன்னட சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான இவர், மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்.

    இதையடுத்து, தனது பெயரான 'மது'வுக்கு முன், 'மைக்கேல்'-ஐ சேர்த்து 'மைக்கேல் மது'வானார்.

    இந்த போட்டோவுல, வழக்கமா வர்ற உங்க ஸ்மைல் எங்க போச்சு..? பிக்பாஸ் பிரபலத்திடம் கேட்கும் ஃபேன்ஸ்!இந்த போட்டோவுல, வழக்கமா வர்ற உங்க ஸ்மைல் எங்க போச்சு..? பிக்பாஸ் பிரபலத்திடம் கேட்கும் ஃபேன்ஸ்!

    நடிப்பில் கவனம்

    நடிப்பில் கவனம்

    பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தினார். கன்னட ஹீரோ சிவராஜ்குமாரின் ஓம் படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது காமெடி பேசப்பட்டதால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. இவரது தனித்துவமான காமெடியும் பாடிலாங்குவேஜும் ரசிகர்களிடையே அவரைப் பிரபலமாக்கியது.

    மயங்கி விழுந்தார்

    மயங்கி விழுந்தார்

    கன்னடத்தில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஏ, ஏகே 47, சூர்யவம்சா, நீலாம்பரி, கஜனுரா கண்டு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள மைக்கேல் மது, கன்னடத்தில் அனைவருக்கும் அறிந்த முகம். பெங்களூரில் வசித்து வந்த இவர், நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    இதையடுத்து அவரது உறவினர்கள், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு வயது 51. இதையடுத்து உறவினர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    அவரது இறுதிச்சடங்கு இன்று நடந்துள்ளது. மறைந்த மைக்கேல் மதுவுக்கு மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சினிமாவில் ஏராளமான நண்பர்களை கொண்டவர் மைக்கேல் மது. கொரோனா லாக்டவுன் காரணமாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவரது நெருங்கிய உறவினர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

    கார்த்திக் கவுடா

    கார்த்திக் கவுடா

    இதையடுத்து கன்னட திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.ஜி.எப் தயாரிப் பாளர்களில் ஒருவரான கார்த்திக் கவுடா தனது டிவிட்டரில், 'உங்களின் பல காமெடி இன்னும் ரசிகர்களிடையே சிரிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Sandalwood’s well-known comedian Michael Madhu who was known for his unique acting skills passed away
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X