ராகிணி, சஞ்சனாவுக்கு எப்படி தொடர்பு? போதை வழக்கு.. இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

By

பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் இந்த மாத இறுதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திரஜித் லங்கேஷ்

இந்திரஜித் லங்கேஷ்

கன்னடப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், கன்னட சினிமாவில் இளம் நடிகர், நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகப் புகார் கூறியிருந்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் ஒப்படைத்தார்.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இதையடுத்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்கள் நண்பர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர்.

பரப்பனஅக்ரஹாரா

பரப்பனஅக்ரஹாரா

கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவர்கள் சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளதை அடுத்து, அமலாக்கத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

குற்றப் பத்திரிகை

குற்றப் பத்திரிகை

இந்த வழக்கில், இந்த மாத இறுதிக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் போதைப் பொருள் விற்பனை, அது தொடர்பான விரிவான விளக்கங்களும் கைது செய்யப்பட்டவர்களின் தொடர்புகளும் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X