அனுஷ்காவால் கார்த்தி ஹீரோயினை திட்டித் தீர்த்த கன்னட ரசிகர்கள்
பெங்களூர்: நடிகை அனுஷ்காவால் நடிகை ரஷ்மிகா மந்தனாவை கன்னட ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அனுஷ்கா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அண்மையில் தனது அம்மா பிரஃபுல்லா ஷெட்டிக்கு கன்னடத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.
அவரின் போஸ்ட்டை பார்த்த கன்னட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் நடிகை ரஷ்மிகா மந்தனா மீது கோபம் கொண்டனர்.

ரஷ்மிகா
கன்னட படம் மூலம் நடிகையான ரஷ்மிகா தற்போது தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த டியர் காம்ரேட் படம் கடந்த மாதம் ரிலீஸானது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது கன்னடத்தில் பேசுவது கடினமாக உள்ளதாக ரஷ்மிகா தெரிவித்தார். இதை பார்த்த கன்னட ரசிகர்கள் அவரை விளாசினார்கள்.
அனுஷ்கா
ஏற்கனவே ரஷ்மிகாவை கண்டபடி திட்டிய கன்னட ரசிகர்கள் அனுஷ்கா தன் அம்மாவை வாழ்த்திப் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்து மேலும் திட்டுகிறார்கள். தெலுங்கு திரையுலகில் செட்டில் ஆகிவிட்டாலும் தாய் மொழியான கன்னடத்தை மறக்காமல் உள்ளார் அனுஷ்கா. ஆனால் ரஷ்மிகாவுக்கு தாய் மொழியில் பேச கஷ்டமாக இருக்கிறதாம் என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

பணம்
ரஷ்மிகா சமூக வலைதளங்களில் கன்னடத்தில் டைப் செய்வது இல்லை. தாய் மொழியில் டைப் செய்ய வெட்கப்படும் ரஷ்மிகாவுக்கு சாண்டல்வுட் கொடுக்கும் பணம் மட்டும் வேண்டுமாம். தாய் மொழியை பற்றி தரக்குறைவாக பேசும் ரஷ்மிகாவின் படங்களை இனி பார்க்க மாட்டோம் என்று கன்னட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கெரியர்
கர்நாடகாவை சேர்ந்த அனுஷ்கா மேடம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ளார். பல சூப்பர் ஸ்டார்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் தன் சொந்த மாநிலத்தையும், தாய் மொழியையும் மறக்கவில்லை. இதனால் தான் அவர் சிறந்தவராக உள்ளார். ஆனால் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஹீரோயின் ரஷ்மிகா கன்னட படம் மூலம் கெரியரை துவங்கிவிட்டு சீன் போட்டுக் கொண்டிருப்பது வெட்கக்கேடு என்கிறார்கள் சாண்டல்வுட் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











