துரைக்கு தாய் மொழி வராதோ?: பிரபல நடிகர், மனைவியை விளாசிய ரசிகர்கள்

By Siva

பெங்களூர்: ஆங்கிலத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகர் யஷ், நடிகை ராதிகா பண்டிட்டை கன்னட ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் யஷ் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ராதிகாவின் மேக்கப் ஆர்டிஸ்ட் பிரசாந்த் அவருக்கு ஒரு சிறப்பு பரிசு அளித்திருந்தார்.

Sandalwood fans slam Yash and Radhika

அதாவது யஷ், ராதிகாவின் குழந்தை ஐராவின் கைகள், பாதங்களை வெள்ளியில் செய்து அதை பரிசளித்தார் பிரசாந்த். அந்த அன்பளிப்பை ரசிகர்களிடம் தெரிவிக்க யஷ், ராதிகா ஆகியோர் சேர்ந்து பேசிய வீடியோவை வெளியிட்டனர்.

யஷ் வெளியிட்ட அந்த வீடியோவில் அவரும், ராதிகாவும் ஆங்கிலத்தில் பேசியிருந்தது கன்னட ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. யஷ், ராதிகா கன்னடத்தில் தான் பேசுவார்கள். ஆனால் இம்முறை ஏனோ ஆங்கிலத்தில் மட்டுமே பேசியுள்ளனர்.

இந்நிலையில் கன்னட ரசிகர்கள் அவர்களை விளாசி ட்விட்டரில் கமெண்ட் போட்டுள்ளனர். கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகிவிட்டதால் தாய் மொழி மறந்துவிட்டதா யஷ் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். யஷுக்கு புகழ் தலைக்கு ஏறிவிட்டது அதனால் தான் ஆங்கிலத்தில் மட்டும் பேசியுள்ளார் என்கின்றனர் சிலர்.

நீங்கள் இந்த வீடியோவை வெளியிட்டது கர்நாடகாவில் உள்ள ரசிகர்களுக்கா இல்லை பிற துறைகளில் உள்ள ரசிகர்களுக்காகவா?. கே.ஜி.எஃப். படம் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு கன்னடம் மறந்துவிட்டது போன்று என்கிறார்கள் கன்னட ரசிகர்கள்.

ராதிகா மேடம், நீங்கள் கன்னடத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறவில்லை. கன்னடத்திலும் பேசுங்கள் என்றே கூறுகிறோம். உங்கள் அளவுக்கு எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. வளர்த்து விட்ட தாய் மொழியை மறக்க வேண்டாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருப்பதால் தான் பேசுவது அனைவருக்கும் புரிய வேண்டும் என்று நினைத்து கூட யஷ் அந்த வீடியோவில் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். ஆனால் அது சாண்டல்வுட் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

முன்னதாக முதல் குழந்தை ஐரா பிறந்த 6 மாதத்தில் ராதிகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் யஷ். அந்த அறிவிப்பு வீடியோவை பார்த்தும் ரசிகர்கள் அவர்களை விளாசினார்கள். ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே ஒன்றரை ஆண்டாவது இடைவெளி விட வேண்டும் என்பது கூட தெரியாதா, படித்தவர்களா நீங்கள் என்று கேட்டு பலரும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X