வாரத்திற்கு 3, இப்போ ஒன்னு கூட இல்லை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் வேதனை

By Siva

Recommended Video

அர்ஜுன் விவகாரம்: வசமாக சிக்கிய ஸ்ருதி ஹரிஹரன்- வீடியோ

பெங்களூர்: அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.

நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அர்ஜுன் ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஸ்ருதிக்கு கன்னட திரையுலகில் அவ்வளவாக ஆதரவு இல்லாமல் போய்விட்டது.

ஸ்ருதி

ஸ்ருதி

அர்ஜுன் மீது ஸ்ருதி புகார் தெரிவித்ததில் இருந்து ஸ்ருதியை கன்னட திரையுலகினர் பலரும் ஒதுக்கி வைக்கத் துவங்கிவிட்டனர். அர்ஜுன் அப்படி தவறாக எதுவும் செய்திருக்க மாட்டார், ஸ்ருதி விளம்பரம் தேட பொய் புகார் தெரிவித்துள்ளதாக சாண்டல்வுட்காரர்கள் பலரும் நம்புகிறார்கள்.

கன்னட படங்கள்

கன்னட படங்கள்

பாலியல் புகார் தெரிவிக்கும் முன்பு வரை ஸ்ருதிக்கு வாரத்திற்கு குறைந்தது 3 பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது வாய்ப்பே வருவது இல்லை. இது குறித்து அவர் கூறியதாவது, முன்பு பல வகையான ஸ்க்ரிப்டுகள் என்னை தேடி வந்தன. ஒரு படம் நன்றாக ஓடினால் வாய்ப்புகள் அதிக அளவில் வரும். கடந்த செப்டம்பர் மாதம் என் பெரிய கமர்ஷியல் படம் ரிலிஸானது என்கிறார்.

மீ டூ

மீ டூ

நான் வாயை மூடிக் கொண்டிருந்தால் தற்போதும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும். கெரியர் பாதிக்கப்படும் என்ற பயத்தில் இனி வெகு சிலர் மட்டுமே பாலியல் தொல்லை குறித்து பேசுவார்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் புகார் தெரிவித்த பிறகு 2 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை சுவாரஸ்யமாக இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

விருப்பம்

விருப்பம்

திரையுலகினர் யாருக்கும் என்னுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை போன்று. இப்படித் தான் நடக்கும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சில எதிரிகள் உருவாகுவார்கள். ஆனால் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு என் போராட்டத்தை தொடர்வேன். நடிப்பு தவிர பிற கனவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும் போல. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் ஸ்ருதி ஹரிஹரன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X