Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மிரட்டும் சந்தீப் கிஷன் புது பட போஸ்டர்… இதிலும் விஜய் சேதுபதி வில்லனா ?
ஹைதராபாத் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் சந்தீப் கிஷன்.
கோபக்கார இளைஞராக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதன்பிறகு சில தமிழ் படங்களில் நடித்தாலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.
இன்று அவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மைக்கல் எனும் பெயரில் வெளியாகி இருக்கும் பஸ்ட் லுக்கில் சிக்ஸ் பேக் உடன் மிரட்டலாக காணப்படுகிறார் சந்தீப் கிஷன்.
பிரைட்
நடிகர்
காத்து
அடுத்த
இயக்குநர்
பக்கம்
பாய
அந்த
நடிகர்
தான்
காரணமா..
கடுப்பில்
இயக்குநர்!

விஜய் சேதுபதியின் வாழ்த்து
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் மைக்கேல் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சந்தீப் கிஷன் ஐ வாழ்த்தி விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். " மைக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது சந்தோஷம். எனதருமை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தீப் கிஷன் என அதில் குறிப்பிட்டுள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அது வில்லன் கதாபாத்திரமா அல்லது வேறு ஒன்றா என இன்னும் உறுதிப்படுத்தவில்லை. Uppena தெலுங்கு படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலிருந்து தொடர் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

மிரட்டும் போஸ்டர்
மைக்கல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வந்துள்ளது. உடல் முழுக்க ரத்தத்துடன் காணப்படும் சந்தீப் கிஷன், தன்னை நோக்கி இருக்கும் துப்பாக்கி, கத்தி களுக்கு பதில் சொல்வதுபோல கையில் துப்பாக்கியுடன், கண்ணில் பயம் அறியாதவர் போல நின்று இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக திவ்யாஷா கௌசிக், நடிக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்க இருக்கிறார். இவர்களோடு வரலட்சுமி சரத்குமார் விரைவில் இணைய உள்ளார். ஆக்சன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் துவங்க உள்ளது.

பிறந்தநாள் பரிசு
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சந்தீப் கிஷன் அவர் நடிக்கும் இரண்டு புதிய படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அவரது பிறந்தநாளை மேலும் இன்புறச் செய்துள்ளது. மைக்கல் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் ' Ooru peru bhairavakona ' படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உள்ளது அதன் படக்குழு. சந்தீப் கிஷன் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு " ஸ்பெஷலான திரைப்படம் ஸ்பெஷலான மனிதர்களிடமிருந்து. டைரக்டர் ஆனந்த் அழகான மூளையிலிருந்து விசித்திரமான உலகம். நல்ல நண்பராக இருந்ததற்கு எனது அன்பு என இயக்குனரை குறிப்பிட்டுள்ளார். மைக்கேல் படத்தின் போஸ்டர் போலவே இதன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

Blood, sweat & ambition
நடிகர் சந்தீப் கிஷான் கடந்த வருடம் அவர் நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் பேசப்படாததாள் இந்த வருடம் நிச்சயம் ஒரு வெற்றி படத்தை தந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இவர். இன்று அவரது இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் பார்த்தபிறகு ரசிகர்கள் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர். மைக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்து " இரத்தம், வியர்வை & கனவு. மைக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு. நான் மிகவும் எதிர்பார்த்து நடிக்க காத்திருக்கும் படம். அதிர்ஷ்டத்தால் கனவு உழைப்பை ஜெயிக்குமா என சோதிக்கும் நேரம் என சந்தீப் கிஷன் பதிவிட்டுள்ளார்.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் த்ரிஷா.. அடுத்த ரவுண்ட் தளபதி 67 அப்டேட் ஸ்டார்ட்!
-
கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோ தாமதம் ஏன்.. இதுதான் காரணம்!
-
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!