நடிகர் சந்தீப் கிஷான் தயாரிக்கும் "விவாக போஜனம்பு".. ப்ரி-லுக் போஸ்டர்!

ஹைதராபாத் : தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் சந்தீப் கிஷான் தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.

யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகராக மிகவும் பிரபலமான சந்தீப் கிஷான் தற்பொழுது விவாக போஜனம்பு என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதை தொடர்ந்து அதன் ப்ரீ-லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

தயாரித்து வருகிறார்

தயாரித்து வருகிறார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான மாநகரம் மற்றும் யாருடா மகேஷ், மாயவன் உள்ளிட்ட பிரபலமான தமிழ் திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் இளம் நாயகனாக இருந்து வரும் சந்தீப் கிஷான் அதேசமயம் பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

ஹோட்டலின் பெயரிலேயே

ஹோட்டலின் பெயரிலேயே

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கி வரும் இவர் அதே சமயம் விவாக போஜனம்பு என்ற பிரபலமான ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தெலுங்கு மாநிலங்களில் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த ஹோட்டலின் பெயரிலேயே தற்போது திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இளம் நடிகர்கள் இணைந்து

இளம் நடிகர்கள் இணைந்து

தெலுங்கில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஃபேன்டஸி திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான சிம்புதேவன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு பாக்கியராஜ், ரெஜினா கஸன்ட்ரா, பிரியா பவானி சங்கர் என பல இளம் நடிகர்கள் இணைந்து நடித்துவரும் கசடதபற என்ற ஆன்தாலஜி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

விவாக போஜனம்பு

விவாக போஜனம்பு

இவ்வாறு நடிகராக ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பி வரும் சந்தீப் கிஷான் ஏற்கனவே "நினு வீடனி நீடனு நேநே" என்ற திரைப்படத்தையும், ஏ ஒன் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தையும் தனது சொந்த தயாரிப்பில் இணைந்து தயாரித்துள்ள நிலையில், தற்பொழுது "விவாக போஜனம்பு" என்ற திரைப்படத்தையும் தயாரிக்கிறார்.

இயக்குனர் ராம் அப்பாராஜு

இயக்குனர் ராம் அப்பாராஜு

தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பலூன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கே எஸ் சினிஸ் உடன் இணைந்து சந்தீப் கிஷான் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தினை இயக்குனர் ராம் அப்பாராஜு இயக்குகிறார்.

Recommended Video

#RealManChallenge | RRR Director exact status | Sandeep Vanga Reddy
சஸ்பென்ஸாக

சஸ்பென்ஸாக

கழுத்தில் கல்யாண மாலையுடன், கையெடுத்து கும்பிட்டவாறு வெளியிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் கலர்ஃபுல் ப்ரீ-லுக் போஸ்டர் தற்பொழுது அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், இதில் நடிகர்களாக நடிக்கவுள்ள ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்களின் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடாமல் இந்த படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது. அதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என இப்படக்குழு தெரிவித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Read more about: sandeep kishan telugu film
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X