அனிமல் இயக்குநர் குறித்து அப்படி பேசிய கெளதம் மேனன்.. சந்தீப் ரெட்டி இப்படி தங்கமானவரா இருக்காரே!

சென்னை: அனிமல் படத்தை இயக்கி ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் வெறுப்புகளை சம்பாதித்த சந்தீப் ரெட்டி வங்கா திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து அடுத்ததாக பிரபாஸ் படத்துக்கான வேலைகளை பார்த்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் தலைவர் 171வது படத்தின் டீசர் குறித்தும் கௌதம் மேனன் பற்றியும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் சந்தீப் ரெட்டி வங்கா.

Sandeep Reddy Vanga loves Gautham Menon all movies

அந்தப் படத்தையே பாலிவுட்டில் கபீர் சிங் என ரீமேக் செய்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். அதன் பின்னர் கடந்த ஆண்டு அவர் இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளையும் வசூல் சாதனைகளையும் குவித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக தற்போது மாறியுள்ளார்.

900 கோடி வசூல்: அர்ஜுன் ரெட்டி என்னும் ஒரே படத்தை பல ஆண்டுகளாக உருட்டிக் கொண்டிருந்த சந்தீப் ரெட்டி வங்கா கடந்தாண்டு இயக்கிய அனிமல் திரைப்படத்தின் மூலம் 900 கோடி வசூலை ஈட்டி பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். ஆல்ஃபா மேல் என்னும் விஷயத்தை அனிமல் படத்தில் அமீர் கபூரை வைத்து இயக்கி பலரையும் காண்டாகி விட்டார்.

பிரபலங்கள் கடும் எதிர்ப்பு: சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த படம் கடுமையான விமர்சனங்களையும் பிரபலங்களின் சாபங்களையும் வாங்கியது. நடிகை ராதிகா, ஆர் ஜே பாலாஜி, பாடகர் ஸ்ரீனிவாஸ், கோட் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் அனிமல் படத்துக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கௌதம் மேனன் பேச்சு: அனிமல் படத்தில் வரும் ஆல்பா மேல் கதாபாத்திரம் குறித்து தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இதைப்பற்றி ஏதாவது கருத்து தெரிவித்தால், சந்தீப் ரெட்டி வங்கா டீமில் இருந்து ஒருவர், யார் இந்த கௌதம் மேனன் என கேள்வி எழுப்புவார்கள். அவரும் என்னை தெரியாது என்றே சொல்வார் என சில மாதங்களுக்கு முன்னதாக கூறியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா ரசிகர்: இந்நிலையில், சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குநர் கௌதம் மேனன் தான் என்றும் அவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு தீவிர ரசிகர் நான் என்றும் கூறியுள்ளார். மேலும் கௌதம் மேனன் இயக்கிய அனைத்து படங்களும் தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் பேசியுள்ளார்.

பிரபாஸின் ஸ்பிரிட்: அனிமல் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த உள்ள ஸ்பிரிட் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். கல்கி மற்றும் ராஜாசாப் படங்களை முடித்துவிட்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். அந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையே படத்தின் 300 கோடி பட்ஜெட்டுக்கு லாபமாக வந்து விடும் என்றும் முதல் நாள் வசூல் மட்டும் 150 கோடி ரூபாய் வரும் என இப்பவே உறுதியாக கூறி கெத்துக் காட்டுகிறார் அனிமல் இயக்குநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X