Sandeep Reddy Vanga: சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. கொந்தளித்த நெட்டிசன்கள்

மும்பை: 2024ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், நயன்தாரா, ஷாகித் கபூர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில் சிறந்த இயக்குநருக்கான தாதா சாகேப் பால்கே விருது அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டது. இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விருதுகளுக்கு மதிப்பே இல்ல
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த அனிமல் திரைப்படம் டிச.1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிமல் படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இதனையடுத்து திரையரங்குகளில் ரிலீஸான அனிமல் படத்துக்கு ஆரம்பத்தில் சில நாட்கள் வரை நல்ல ஓபனிங் கிடைத்தது. அதேநேரம் கலவையான விமர்சனங்களே அதிகம் வந்தன.

 Sandeep Reddy Vanga: Netizens trolled Sandeep Reddy Vanga for Dada Saheb Phalke award

ஆனால், தமிழ்நாட்டில் அனிமல் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன. ஆல்ஃபா மேல் என்ற ஆணாதிக்கம் பற்றிய உரையாடல் என அதிகளவில் வன்மம் பிடித்த காட்சிகளுடன் படத்தை இயக்கியுள்ளார் என சந்தீப் ரெட்டி வாங்காவை கடுமையாக விமர்சித்திருந்தனர். அதேபோல் நடிகை ராதிகா, பாடகர் ஸ்ரீநிவாஸ் என ஏராளமான திரை பிரபலங்களும் அனிமல் படம் பற்றி கடுமையாக விமர்சித்தனர்.

அதேபோல் பிரபல பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் அனிமல் திரைப்படம் குறித்து காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது விழா நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. அதில் சிறந்த இயக்குநருக்கான விருது சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து சந்தீப் ரெட்டி வாங்கா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த விருது பற்றி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 Sandeep Reddy Vanga: Netizens trolled Sandeep Reddy Vanga for Dada Saheb Phalke award

அனிமல் போன்ற ஒரு படத்தை ஊக்குவிக்க கூடாது எனவும், சந்தீப் ரெட்டி வாங்கா மாதிரியான இயக்குநர்களை விருது கொடுத்து அங்கீகரிப்பது ஆபத்தான போக்கு எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து நடந்தால் விருதுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வாங்கா தாதா சாகேப் விருது வென்றதை பாலிவுட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த விழாவில் ஜவான் படத்தின் ஹீரோ ஷாருக்கான் சிறந்த நடிகருக்கான தாதா சாகேப் பால்கே விருதையும், நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றனர். இவர்கள் தவிர்த்து ராணி முகர்ஜி, கரினா கபூர் ஆகியோருக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X