இந்த மொட்டை தலை யாருன்னு தெரியுதா?.. பாலிவுட்டையே அதிர வைத்த அனிமல் பட இயக்குநரா இவர்?

திருப்பதி: ஜிகர்தண்டா படத்தில் இது குப்பை படம் என்றும் இது சூப்பர் படம் என்றும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதை அனிமல் படத்தை விட ரியல் டைமில் எந்தவொரு படமும் சமீபத்தில் சாதித்துக் காட்டியிருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான்.

2017ம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டேவை வைத்து அர்ஜுன் ரெட்டி எனும் படத்தை இயக்கி ஒரே படத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தனது மேக்கிங் ஸ்டைல் மற்றும் போல்டான கேரக்டரைசேஷன் மூலம் ஈர்த்தவர் சந்தீப் ரெட்டி வங்கா.

Sandeep Reddy Vanga offers his hair to Tirupati and his bald avatar photos trending with trolls

அர்ஜுன் ரெட்டி போல ஒரு ஹிட் படத்தை அடுத்து கொடுக்க முடியாமல் விஜய் தேவரகொண்டா தவித்து வரும் நிலையில், அந்த படத்தையே பாலிவுட்டில் கபிர் சிங் என ரீமேக் செய்து கல்லா கட்டினார்.

திருப்பதியில் மொட்டை: உலக கோப்பையை வென்றதும் எம்.எஸ். தோனி எப்படி மொட்டைப் போட்டாரோ அதே போல அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது நீண்ட நெடிய தலை முடி மற்றும் பெரிய தாடி என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்து மொட்டை போட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சந்தீப் ரெட்டி வங்கா அங்கே மொட்டையடித்த தலையுடன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

800 கோடி வசூல்: அர்ஜுன் ரெட்டி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூல் ஈட்டியது. அதே படத்தை இந்தியில் இயக்கி 400 கோடி வசூல் ஈட்டினார் சந்தீப் ரெட்டி வங்கா. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி திம்ரி, பப்லு உள்ளிட்டோரை வைத்து கடந்த ஆண்டு அவர் இயக்கிய அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி உலகளவில் வெளியானது. ஒட்டுமொத்தமாக 800 கோடிக்கும் அதிகமாக அனிமல் படம் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.

Sandeep Reddy Vanga offers his hair to Tirupati and his bald avatar photos trending with trolls

கடும் விமர்சனம்: அனிமல் எல்லாம் ஒரு படமே கிடையாது என்றும் பெண்களை கொச்சைப்படுத்தும் படத்தை யாரும் பார்க்கக் கூட வேண்டாம் என விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தாலும், அனிமல் படத்தை அந்த விஷயங்கள் தான் இளைஞர்களை அதிகமாக லைக் செய்ய வைத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

அடுத்து பிரபாஸ் படம்: அனிமல் படத்துக்கு எக்கச்சக்க விருதுகளையும் வென்ற சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் எனும் படத்தை இயக்க உள்ளார். கல்கி மற்றும் ராஜாசாப் படங்களை தொடர்ந்து ஸ்பிரிட் படத்தில் தான் பிரபாஸ் நடிக்கப் போகிறாராம். அந்த படத்தை முடித்து விட்டு சலார் 2வில் பிரசாந்த் நீல் உடன் பிரபாஸ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கி ட்ரோல்: அனிமல் படமே சரியான சங்கி படம் தான் என சந்தீப் ரெட்டி வங்காவை ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில், தற்போது திருப்பதி கோயிலில் மொட்டை அடித்துக் கொண்டு சந்தீப் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு சரியான சங்கி என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X