அந்த முட்டாள் படத்திற்கு 3.5 ஸ்டார், என் படத்துக்கு 2 ஸ்டாரா?: பிரபல இயக்குநர் விளாசல்
மும்பை: கபிர் சிங் படத்தை கடுமையாக விமர்சித்தவர்களை விளாசியுள்ளார் இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி.
விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி அதை இந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 21ம் தேதி வெளியான கபிர் சிங் இதுவரை ரூ. 218 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படம் குறித்து சந்தீப் வாங்கா ரெட்டி பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

கபிர் சிங்
கபிர் சிங் படத்தில் கபிர் ப்ரீத்தியை(கியாரா அத்வானி) அறைந்ததை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். ப்ரீத்தி கபிர் சிங்கை காரணமே இல்லாமல் அறைந்தார். கபிராவது காரணத்தோடு ப்ரீத்தியை அறைந்தார். உங்களின் காதலியை அறைய, விரும்பிய இடத்தில் தொட, முத்தம் கொடுக்க முடியாது என்றால் அதில் எமோஷனே இல்லை.

சந்தீப்
கபிர் சிங் படத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் திரையுலகிற்கு அச்சுறுத்தலாக உள்ள ஒட்டுண்ணிகள். அவர்களுக்கு காதல் பற்றி சரியாக தெரியவில்லை. அந்த குண்டான விமர்சகர் ராஜீவ் மாசாந்த் என் படத்தை விளாசி 2 ஸ்டார் கொடுத்துள்ளார். ஆனால் பார்வையாளர்கள் என் படத்திற்கு ரூ. 200 கோடி கொடுத்துள்ளனர்.

3.5 ஸ்டார்
ராஜீவ் மாசாந்த் சஞ்சு என்கிற முட்டாள் படத்திற்கு 3.5 ஸ்டார்கள் கொடுத்தார். அந்த படத்தின் ஹீரோ 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொண்டதை பார்வையாளர்கள் விசில் அடித்து கொண்டாடியதாக தெரிவித்தார். கபிர் சிங் படத்தை துவங்கியபோதே இது பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிபார்க்கவில்லை.

வெறுப்பு
கபிர் சிங் ரூ. 300 கோடி வசூல் செய்யும் என்று நம்புகிறேன். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியை பார்த்தவர்கள் அதன் பலதரப்பட்ட காட்சிகள் குறித்து விமர்சித்தனர். ஆனால் இங்கோ பெண்ணியம் பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்கள். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார் சந்தீப் வாங்கா. ஷாஹித் கபூரின் கெரியரில் பெரிய அளவில் ஹிட்டான படம் கபிர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











