தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு 'இவர்' தாங்க இனி பி, சி சென்டர் கிங்: சுசீந்திரன்
சென்னை: தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு பி அன்ட் சி ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நான் நம்புகிறேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் சுசீந்திரன் பேசியதாவது,

விஜய் சேதுபதி
இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் பற்றி சொல்ல வேண்டும். சந்தீப் இந்த படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். தனுஷ், விஜய் சேதுபதிக்கு பிறகு பி அன்ட் சி ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நான் நம்புகிறேன்.

உழைப்பாளி
இந்த படத்தில் சந்தீப்பிடம் நான் மிகச் சிறந்த நடிகனை பார்த்திருக்கிறேன். கிளைமாக்ஸில் அருமையாக நடித்துள்ளார். இது அவருக்கு 50 சதவீதம் தான். அவரின் திறமைக்கு ஏற்ற தீணி இனி நிறைய உள்ளது.

பெருமை
இந்த படத்தின் மூலம் நான் சந்தோஷப்படக்கூடிய விஷயம் விக்ராந்த். என்னுடயை ஹீரோன்னு நான் பெருமையாக சொல்லிக்கக் கூடியவர் விக்ராந்த்.

கதாபாத்திரம்
பாண்டிய நாடு படத்தில் சின்ன கதாபாத்திரம் தான் விக்ராந்துக்கு. இந்த படத்தில் அவருக்கு பெரிய கதாபாத்திரம். படம் முழுக்க வருவார். அவருக்கு ஃபைட், சாங் எல்லாம் உண்டு என்றார் சுசீந்திரன்.


Click it and Unblock the Notifications











