பகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்
Recommended Video

ஹைதராபாத்: பகலில் அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சந்தியா நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஸ்ரீ ரெட்டியை சக நடிகைகளே மோசமாக பேசினார்கள்.
இந்நிலையில் அபூர்வா என்கிற பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு அளித்தார்.

ஸ்ரீ ரெட்டி
அபூர்வா ஆதரவு அளித்த பிறகு பிற நடிகைகளும் ஸ்ரீ ரெட்டியை ஆதரிக்கிறார்கள். மேலும் தாமாக முன்வந்து தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக டிவி சேனல்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கியுள்ளனர்.

அம்மா
அம்மா, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடித்து வரும் சந்தியா நாயுடு கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். படுக்கைக்கு சென்றால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் சந்தியா.

இரவு
பகலில் என்னை அம்மா என்று அழைத்துவிட்டு இரவில் படுக்கைக்கு வருமாறு கூறுகிறார்கள். வீட்டிற்கு சென்றதும் வாட்ஸ்ஆப் மூலம் அவர்களுடன் சாட் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப்
விருப்பம் இல்லாவிட்டாலும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்ய வேண்டி உள்ளது. ஒருவர் வாட்ஸ்ஆப் சாட்டின்போது நான் என்ன உடை அணிந்திருக்கிறேன், அது லேசான துணியா என்று கேட்டார் என கூறி வருத்தப்பட்டார் சந்தியா.


Click it and Unblock the Notifications











