சினிமா ஆசையில் நாசமான சந்தியாவின் குடும்பம்: அந்தோ பரிதாபம்
சென்னை: சந்தியாவுக்கு சினிமா ஆசை அதிகமானதால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த சைகோ கணவர் அவரை கொலை செய்துள்ளார்.
சென்னையில் குப்பையில் கிடந்த கால்கள் மற்றும் கை துணை நடிகை சந்தியாவுடையது என்பது விசாரணையில் தெரிய வந்தது. சந்தியாவின் தலையை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
2 குழந்தைகளுக்கு தாயான சந்தியா சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

கணவர்
சந்தியா சினிமா படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பினார். இது அவரின் கணவர் பாலகிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து சந்தியா கணவரை பிரிந்து பெண்கள் விடுதியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடினார்.

படங்கள்
குழந்தைகள், கணவரை விட்டு தனியாக வந்த சந்தியா விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். சினிமாவில் பெரிய ஆளாகும் ஆசையில் அவர் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் தீவிரமாக வாய்ப்பு தேடி வந்தார்.

நாசம்
சினிமா ஆசையில் சந்தியாவின் குடும்ப வாழ்க்கை நாசமானது. இந்நிலையில் தான் படங்களில் நடிப்பது தொடர்பாக சந்தியா, பாலகிருஷ்ணன் இடையே வாக்குவாதம் ஏற்பட அவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை
பாலகிருஷ்ணனுக்கு தான் மட்டும் தான் திரையுலகில் இருக்க வேண்டும் என்ற ஆசை. மனைவியும் திரையுலகில் பெயர் எடுக்க விரும்பியது அவருக்கு பிடிக்காமல் அவரை இப்படி கொலை செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிவிட்டார்.


Click it and Unblock the Notifications











