»   »  சந்தியாவும், மூக்கும் காதல் டப் ஆகி தெலுங்கில் பெரிய அளவில் ஓடி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சந்தியாவுக்கு மணவாடுகள் மத்தியில்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் நேரடி தெலுங்குப் படத்தில் அவரை நடிக்க வைக்க பெரும்போட்டா போட்டியே ஏற்பட்டுள்ளதாம். சந்தியா நடித்த முதல் படமான காதல், தமிழில் பெரும் வரலாறு படைத்தது. சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அப்படம்,இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கருக்கும் பெரும் வசூலை வாரித் தந்தது. யாருமே எதிர்பாராத வகையில் ஓடிக்கலக்கிய காதல் பின்னர் தெலுங்கிலும் டப் ஆகி அங்கும் வசூலை அள்ளி இறைத்தது. காதல் நாயகி சந்தியாவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவராமல் இழுபறியாக உள்ள நிலையில் சந்தியாவுக்கு தெலுங்கிலும்மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சந்தியாவை நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க வைக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் முண்டியடித்து வருகிறார்களாம்.இருப்பினும் தற்போது சிம்புவுடன் நடித்து வரும் வல்லவன் வெளியான பின்னரே தெலுங்குப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியும், எனவே ப்ளீஸ் வெயிட் செய்யண்டி என்று செப்பி வருகிறாராம். இதற்கிடையே சந்தியா பற்றிய கிசுகிசுக்கள் தெலுங்கு பத்திரிக்கைகளில் உலா வர ஆரம்பித்து விட்டன. சந்தியா தனது அழகைமேலும் தூக்கிக் காட்ட ஸ்ரீதேவி போல மூக்கில் சிறிய ஆபரேஷன் செய்யப்போகிறார், உதட்டை சரி செய்யப் போகிறார் என்றரீதியில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. இந்த செய்திகளால் சந்தியாவுக்கு சற்றே எரிச்சல் ஏற்படுகிறதாம். என் மூக்குக்கு என்ன குறைச்சல், நல்லாத் தானே இருக்கு.அப்புறம் எதுக்கு அதில் கையை வைக்கணும். நான் மூக்கை ஆபரேஷன் எல்லாம் செய்யப் போவதில்லை. இப்போதே நான்அழகாகத் தான் இருக்கிறேன். மூக்கை அறுக்கும் அளவுக்கு அது மோசமாக இல்லை. எப்படித்தான் இப்படியெல்லாம் நியூஸ் போடுறாங்களோ, எப்படியோ,இந்த விஷயத்திலாவது என்னை ஸ்ரீதேவியுடன் கம்பேர் செய்து எழுதியிருக்கிறார்களே, அதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாளிக்கிறார் சந்தியா. சந்தியா மூக்கை சரி செய்கிறாரோ, நாக்கை சீரமைக்கிறாரோ, நடிப்பில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதில் கவனம்செலுத்தினால் நல்லது.

சந்தியாவும், மூக்கும் காதல் டப் ஆகி தெலுங்கில் பெரிய அளவில் ஓடி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சந்தியாவுக்கு மணவாடுகள் மத்தியில்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் நேரடி தெலுங்குப் படத்தில் அவரை நடிக்க வைக்க பெரும்போட்டா போட்டியே ஏற்பட்டுள்ளதாம். சந்தியா நடித்த முதல் படமான காதல், தமிழில் பெரும் வரலாறு படைத்தது. சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அப்படம்,இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கருக்கும் பெரும் வசூலை வாரித் தந்தது. யாருமே எதிர்பாராத வகையில் ஓடிக்கலக்கிய காதல் பின்னர் தெலுங்கிலும் டப் ஆகி அங்கும் வசூலை அள்ளி இறைத்தது. காதல் நாயகி சந்தியாவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவராமல் இழுபறியாக உள்ள நிலையில் சந்தியாவுக்கு தெலுங்கிலும்மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சந்தியாவை நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க வைக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் முண்டியடித்து வருகிறார்களாம்.இருப்பினும் தற்போது சிம்புவுடன் நடித்து வரும் வல்லவன் வெளியான பின்னரே தெலுங்குப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியும், எனவே ப்ளீஸ் வெயிட் செய்யண்டி என்று செப்பி வருகிறாராம். இதற்கிடையே சந்தியா பற்றிய கிசுகிசுக்கள் தெலுங்கு பத்திரிக்கைகளில் உலா வர ஆரம்பித்து விட்டன. சந்தியா தனது அழகைமேலும் தூக்கிக் காட்ட ஸ்ரீதேவி போல மூக்கில் சிறிய ஆபரேஷன் செய்யப்போகிறார், உதட்டை சரி செய்யப் போகிறார் என்றரீதியில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. இந்த செய்திகளால் சந்தியாவுக்கு சற்றே எரிச்சல் ஏற்படுகிறதாம். என் மூக்குக்கு என்ன குறைச்சல், நல்லாத் தானே இருக்கு.அப்புறம் எதுக்கு அதில் கையை வைக்கணும். நான் மூக்கை ஆபரேஷன் எல்லாம் செய்யப் போவதில்லை. இப்போதே நான்அழகாகத் தான் இருக்கிறேன். மூக்கை அறுக்கும் அளவுக்கு அது மோசமாக இல்லை. எப்படித்தான் இப்படியெல்லாம் நியூஸ் போடுறாங்களோ, எப்படியோ,இந்த விஷயத்திலாவது என்னை ஸ்ரீதேவியுடன் கம்பேர் செய்து எழுதியிருக்கிறார்களே, அதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாளிக்கிறார் சந்தியா. சந்தியா மூக்கை சரி செய்கிறாரோ, நாக்கை சீரமைக்கிறாரோ, நடிப்பில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதில் கவனம்செலுத்தினால் நல்லது.

Subscribe to Oneindia Tamil

காதல் டப் ஆகி தெலுங்கில் பெரிய அளவில் ஓடி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சந்தியாவுக்கு மணவாடுகள் மத்தியில்பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் நேரடி தெலுங்குப் படத்தில் அவரை நடிக்க வைக்க பெரும்போட்டா போட்டியே ஏற்பட்டுள்ளதாம்.

சந்தியா நடித்த முதல் படமான காதல், தமிழில் பெரும் வரலாறு படைத்தது. சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அப்படம்,இயக்குநரும், படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கருக்கும் பெரும் வசூலை வாரித் தந்தது. யாருமே எதிர்பாராத வகையில் ஓடிக்கலக்கிய காதல் பின்னர் தெலுங்கிலும் டப் ஆகி அங்கும் வசூலை அள்ளி இறைத்தது.

காதல் நாயகி சந்தியாவின் அடுத்தடுத்த படங்கள் வெளிவராமல் இழுபறியாக உள்ள நிலையில் சந்தியாவுக்கு தெலுங்கிலும்மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.


சந்தியாவை நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க வைக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் முண்டியடித்து வருகிறார்களாம்.இருப்பினும் தற்போது சிம்புவுடன் நடித்து வரும் வல்லவன் வெளியான பின்னரே தெலுங்குப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியும், எனவே ப்ளீஸ் வெயிட் செய்யண்டி என்று செப்பி வருகிறாராம்.

இதற்கிடையே சந்தியா பற்றிய கிசுகிசுக்கள் தெலுங்கு பத்திரிக்கைகளில் உலா வர ஆரம்பித்து விட்டன. சந்தியா தனது அழகைமேலும் தூக்கிக் காட்ட ஸ்ரீதேவி போல மூக்கில் சிறிய ஆபரேஷன் செய்யப்போகிறார், உதட்டை சரி செய்யப் போகிறார் என்றரீதியில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன.

இந்த செய்திகளால் சந்தியாவுக்கு சற்றே எரிச்சல் ஏற்படுகிறதாம். என் மூக்குக்கு என்ன குறைச்சல், நல்லாத் தானே இருக்கு.அப்புறம் எதுக்கு அதில் கையை வைக்கணும். நான் மூக்கை ஆபரேஷன் எல்லாம் செய்யப் போவதில்லை. இப்போதே நான்அழகாகத் தான் இருக்கிறேன்.


மூக்கை அறுக்கும் அளவுக்கு அது மோசமாக இல்லை. எப்படித்தான் இப்படியெல்லாம் நியூஸ் போடுறாங்களோ, எப்படியோ,இந்த விஷயத்திலாவது என்னை ஸ்ரீதேவியுடன் கம்பேர் செய்து எழுதியிருக்கிறார்களே, அதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாளிக்கிறார் சந்தியா.

சந்தியா மூக்கை சரி செய்கிறாரோ, நாக்கை சீரமைக்கிறாரோ, நடிப்பில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அதில் கவனம்செலுத்தினால் நல்லது.


Read more about: sandhiya operates her nose

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil