Sandra Bullock - சாண்ட்ரா புல்லக் கணவர் ப்ரையான் ராண்டல் மரணம்.. அதிர்ச்சியில் ஹாலிவுட்
நியூயார்க்: Bryan Randall (ப்ரையன் ராண்டால்) பிரபல நடிகை சாண்ட்ரா புல்லக்கின் கணவர் ப்ரையான் ராண்டல் மரணமடைந்தார்.
ஹேங்மேன் என்ற படத்தின் மூலம் 1987ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் அறிமுகமானவர் சாண்ட்ரா புல்லக். அந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடமே கிடைத்தது. இதனையடுத்து ஏ ஃபூல் அண்ட் ஹிஸ் மணி என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து அவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் தேடி வந்தன. தேடி வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ஹாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக மாறினார்.

ஸ்பீட் புல்லக்: வரிசையாக அவர் ஹிட் படங்களை கொடுத்து வந்த அவருக்கு ஸ்பீடு திரைப்படம் உலகம் முழுக்க அவரை பிரபல்யப்படுத்தியது. அதன் பிறகு While You Were Sleeping, A Time to Kill, Hope Floats, Proposal, Gravity போன்ற படங்கள் மெகா ஹிட்டாகின. கிராவிட்டி படம் விண்வெளியில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட படமாகும்.
விருதுகள்: சாண்ட்ரா புல்லக் தி பிளைண்ட் சைட் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அது அவரது கரியரில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம் மிக மோசமான நடிகை என்று அமெரிக்காவில் வருடா வருடம் வழங்கப்படும் ரேஸி என்று விருதையும் அவர் ஆல் அபவுட் ஸ்டீவ் என்ற படத்துக்காக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: இவர் அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2010ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த சாண்ட்ரா புல்லக்; புகைப்பட கலைஞராக பிறகு மாடலாக ப்ரையான் ராண்டலுடன் காதலில் விழுந்தார். ராண்டலும் ஏற்கனவே திருமணம் ஆகி அதிலிருந்து வெளியே வந்தவர்.
உறுதி செய்த புல்லக்: இரண்டு பேருக்கும் காதல் இருப்பதாக பலரும் கூறிவந்த சூழலில் புல்லக்கும், ராண்டலும் கடந்த 2021ஆம் ஆண்டு அதை வெளியுலகுக்கு உறூதிப்படுத்தினர். அதுகுறித்து பேசியிருந்த புல்லக், எனது இரண்டு குழந்தைகள், ராண்டலுக்கு ஏற்கனவே இருக்கும் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகளுக்கும் ராண்டல் மிகச்சிறந்த உதாரணம் என தெரிவித்திருந்தார்.
ப்ரையான் ராண்டல் மரணம்: இந்நிலையில் புல்லக்கின் கணவர் ப்ரையான் ராண்டல் Amyotrophic lateral sclerosis என்ற நரம்பியல் நோயால் அவதிப்பட்டுவந்தார். அதுகுறித்து யாருக்கும் தெரியாமலும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 57. அவரது உயிரிழப்பை குடும்பத்தினரும் உறுதி செய்திருக்கின்றனர்.
இதுகுறித்து அவர் குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நோயை குணப்படுத்தி ப்ரையனை காப்பாற்றுவதற்காக போராடிய மருத்துவர்களுக்கும், உதவியாக இருந்த செவிலிகளுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ப்ரையானின் இழப்பை நினைத்து நாங்கள் வருந்துவதற்கு ப்ரைவேசியையும் கேட்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











