குருநாதா என்றழைத்த சாண்டி.. சொல்லுங்க சிஷ்யா என ஓடி வந்த பிக்பாஸ்.. இன்னும் அதையெல்லாம் மறக்கல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி ஹவுஸ்மெட்டுகளுக்கு டாஸ்க்குகளை கொடுத்து உற்சாகப் படுத்தினார்.
பிக்பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ளது. இதனை முன்னிட்டு இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
ஹவுஸ்மெட்டுகளுக்கு வித்தியாசமான டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கடந்த சீசன்களில் பங்கேற்ற பழைய போட்டியாளர்கள் சிலர் பங்கேற்றனர்.

சுவாரசியமான டாஸ்க்குகள்
மகத், வனிதா, ஷெரின், விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் வீடியோ மூலம் பங்கேற்றனர். அப்போது ஹவுஸ்மெட்டுகளுக்கு சில சுவாரசியமான டாஸ்க்குகளை கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

சொல்லுங்க சிஷ்யா
அந்த வகையில் ஹவுஸ்மெட்டுகளை சந்தித்த சாண்டி, அவர்களை நலம் விசாரித்தார். தொடர்ந்து பேசிய சாண்டி பிக்பாஸிடமும் நலம் விசாரித்தார். குருநாதா என்று சாண்டி அழைத்ததும், ஓடி வந்த பிக்பாஸ் சொல்லுங்க சிஷ்யா என்றார்.

ரசிகர்கள் ஹேப்பி
அதனைக் கேட்டதும் சாண்டியும் ஹவுஸ்மெட்ஸும் செம ஹேப்பியாகினர். கடந்த சீசனில் பங்கேற்ற சாண்டி, பிக்பாஸை எப்போதும் குருநாதா என்றே அழைத்து வந்தார். பிக்பாஸும் சாண்டியை கடைசி வரை சிஷ்யா என்றே கூறினார். அதை இன்னும் மறக்காமல் இப்போதும் சிஷ்யா என்றது ரசிகர்களை கவர்ந்தது.

அதுக்குதான வந்துருக்கீங்க
தொடர்ந்து பேசிய சாண்டி, நான் கேம ஸ்டார்ட் பண்ணலாமா பிக்பாஸ் என்றார். அதற்கு அதுக்குதானே வந்துருக்கிங்க என்றார் பிக்பாஸ். தொடர்ந்து தர்பூசணி சாப்பிடும் போட்டியை வைத்தார். இதில் நிஷாவும் ரம்யாவும் பங்கேற்றனர்.

தர்பூசணி சாப்பிடும் போட்டி
இந்த போட்டியில் ரம்யா வெற்றி பெற்றார். தோற்றுப்போன நிஷாவை என்ன நிஷா தர்பூசணியை சாப்பிட சொன்னால் இப்படி டேபிளையெல்லாம் போட்டு பிராண்டி வைக்கிறாய் என்று மரண கலாய் கலாய்த்தார் சாண்டி.

மூக்கில் பால்
அதனை தொடர்ந்து ஜெல் பால் டாஸ்க் கொடுத்தார் சாண்டி. இதில் ரமேஷ், ரியோ, அனிதா ஆகியோர் பங்கேற்றனர். இதில் மூக்கில் முதலில் ஜெல்லை ஒட்டி அதன் மூலம் காட்டன் பால்களை ஒரு இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தட்டில் வைக்க வேண்டும். மூக்கால்தான் பாலை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சாண்டி அட்வைஸ்
ஆனால் அனிதா முகம் முழுக்க ஜெல்லை ஸ்பிரட் பண்ணி, முகம் முழுக்க பாலை ஒட்டி கொத்து கொத்தாக அள்ளிக்கொண்டு போய் சேர்த்தார். இருந்த போதும் அனிதாதான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சாண்டி, சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷமே அதை மறந்துவிட்டு சந்தோஷமாக இருங்கள் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











