"கண்ணான கண்ணே.." திரும்பவும் உருக வைத்த சாண்டி மகள் லாலா.. இது வேற லெவல் விஸ்வாசம் !
சென்னை: சாண்டியின் மகள் லாலாவின் க்யூட்டான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். ரஜினியின் காலா உட்பட பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், பிக் பாஸ் சீசன் 3யை கலகலப்பாக கொண்டு செல்ல பெரிதும் உதவினார். பிக் பாஸ் சீசன் 3யில் ரன்னர் அப் டைட்டில் சாண்டிக்கு கிடைத்தது.

பிக் பாஸ் வீட்டில் சாண்டி இருந்தபோது, அவரைப் போலவே அவரது ஒரு வயது மகள் லாலாவும் பிரபலமானார். சாண்டியின் பிறந்ததினத்தின் போது, விஸ்வாசம் 'கண்ணான கண்ணே' பாடலை வைத்து பிக் பாஸ் அனுப்பிய வாழ்த்து வீடியோ அனைவரையும் பாசத்தில் உருகச் செய்தது.
அப்போதிருந்தே லாலாவிற்கும் தனியாக ரசிகர் வட்டம் உருவாகி விட்டது. பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராகச் சென்றது, பைனல்சில் பண்ணிய குறும்புகள், போட்டியாளர்களுடன் வீட்டில் விளையாடியது என லாலா பெயர் அடிக்கடி சமூகவலைதளங்களில் அடிபட்டது.
இந்நிலையில், இயக்குநர் தமிழரசன் ஒரு ஓவியத்தை சாண்டிக்கு பரிசாக அளித்துள்ளார். அவரே வரைந்த அந்த ஓவியத்தில் சாண்டியும், லாலாவும் உள்ளனர். அந்த ஓவியத்தைப் பார்த்த லாலா, அதில் உள்ள சாண்டிக்கு முத்தமிடுகிறார். பின்னர் அருகில் இருக்கும் நிஜ சாண்டிக்கும் முத்தம் தருகிறார்.
இந்த வீடியோவை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை சாண்டி மற்றும் லாலா ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











