ஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: கவினுக்கும் சாண்டிக்கும் இடையில் பனிப்போர் நீடிக்கும் நிலையில் தன்னை மட்டும் தவறாக நினைக்க வேண்டாம் என கவினிடம் உருகியுள்ளார் சாண்டி.

பிக்பாஸ் வீட்டில் கவினும் சாண்டியும் நெருக்கமான நண்பர்களாக வலம் வந்தனர். சரவணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு கவினுக்கும் சாண்டிக்கும் இடையிலான நெருக்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் கவினுக்கு பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது காதல் லாஸ்லியா மீது வந்தது. இருவரும் காதலித்து வருகின்றனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினுடன் சுற்றி வருகிறார் லாஸ்லியா.

மனஸ்தாபங்கள்

மனஸ்தாபங்கள்

இந்நிலையில் லாஸ்லியாவுக்காக தனது நண்பரையே சந்தேகப்பட தொடங்கிவிட்டார் கவின். சாண்டி லாஸ்லியாவை கிண்டல் செய்வதை கவின் விரும்பவில்லை. இதனால் அடிக்கடி இருவருக்குள்ளும் மனஸ்தாபங்கள் வந்தன.

மல்லுக்கு நின்ற கவின்

மல்லுக்கு நின்ற கவின்

நேற்றைய டாஸ்க்கில் கூட சாண்டி, லாஸ்லியா மீது தெரியாமல் இடிக்க, கீழே விழுந்தார் லாஸ்லியா. இதனால் கோபப்பட்ட கவின், சாண்டியிடம் எகிறினார். தெரியாமல் நடந்துவிட்டது என சாண்டி கூற, கவின் நீ வேண்டும் என்றே செய்தாய் என மல்லுக்கு நின்றார்.

கண்டுகொள்ளாத கவின்

கண்டுகொள்ளாத கவின்

இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் கவினுக்கு நீங்கள் க்ளோஸ் ஃபிரன்டு என்றால் விட்டுக்கொடுங்கள் அவருக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று சாண்டியிடம் சண்டை போட்டார் லாஸ்லியா. அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை கவின்.

கடுப்பான தர்ஷன்

கடுப்பான தர்ஷன்

இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவிலும் லாஸ்லியாவும் கவினும் சாண்டியை கார்னர் செய்தனர். இதனால் கடுப்பான தர்ஷன், சாண்டிக்கு ஆதரவாக கவினிடம் சண்டை போட்டார்.

தப்பா நினைச்சுடாதடா

தப்பா நினைச்சுடாதடா

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டி தனது நியாயத்தையும் தான் செய்ததையும் கவினிடம் எமோஷனலாக பேசி எடுத்து கூறுகிறார். மேலும் நான் உனக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான், என்னை மட்டும் தப்பா நினைச்சுடாதடா என்று கூறுகிறார் சாண்டி.

என்ன ரியாக்ஷன்

என்ன ரியாக்ஷன்

சாண்டி பேசுவதையெல்லாம் அமைதியாக கேட்டுகொண்டிருக்கிறார் கவின். இதனை தொடர்ந்து சாண்டியின் குமுறலுக்கு கவின் என்ன ரியாக்ட் செய்யப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X