பிக்பாஸ் முடிஞ்சுடுச்சு.. அந்த மூனு பேரும் செஞ்ச வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன், சாண்டி, கவின் ஆகிய மூன்று பேரும் செய்த வேலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தர்ஷன், சாண்டி, கவின், லாஸ்லியா மற்றும் முகென் பிக்பாஸ் வீட்டிலேயே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ஒரே மாதிரியாக உடை அணிவது, தங்களுக்கு என வீ ஆர் த பாய்ஸ் ஊ.. ஊ.. என பாடல் பாடுவது என அசத்தி வந்தனர்.
முகென் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அவர்களில் மூன்று பேர் நேற்றிரவு ஜாலியாக டின்னர் சாப்பிட்டுள்ளனர்.

சாண்டியின் வீட்டில்

சாண்டியின் வீட்டில்

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, சாண்டி, தர்ஷன் கவின் ஆகிய மூன்று பேரும் டின்னர் சாப்பிட்டுள்ளனர். இந்த டின்னர் சாண்டியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.

கவின் சாப்பிடவில்லை

கவின் சாப்பிடவில்லை

டைனிங் டேபிளில் வீட்டு சமையல் அசத்தலாக இருக்க, தர்ஷனும் சாண்டியும் மட்டும் வெளுத்து வாங்குகின்றனர். கவின், அவர்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தப்படி உள்ளார்.

ஊட்டிவிட்ட சாண்டி

ஊட்டிவிட்ட சாண்டி

இதனை தொடர்ந்து தர்ஷனுக்கும் கவினுக்கும் ஊட்டி விடுகிறார் சாண்டி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த வீடியோவில் முகெனும் லாஸ்லியாவும் மிஸிங். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் கவின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் ஒற்றுமையாக இருப்பது அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X