ஹீரோவான பிக் பாஸ் சாண்டி மாஸ்டர்.. போஸ்டரே மிரட்டுதே.. ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி!

சென்னை: டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஹீரோவாக நடித்து வரும் '3:33' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நடன இயக்குநராக பிரபலமான சாண்டி மாஸ்டர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போன சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சாண்டி மாஸ்டரின் நகைச்சுவை தன்மைக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை ரசித்து வரும் நிலையில், இப்போ ஹீரோவாகி உள்ளார்.

சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

டிவி ஷோக்களுக்கும் சினிமாவுக்கும் நடன இயக்குநராக பணியாற்றியவர் சாண்டி மாஸ்டர். சந்தோஷ் குமார் எனும் இயற்பெயரை சாண்டி என மாற்றிக் கொண்டார். நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்ட சாண்டி பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனது அசிஸ்டன்ட் நடன இயக்குநர் சில்வியாவை திருமணம் செய்து கொண்டார்.

காலா படத்தில்

காலா படத்தில்

மானாட மயிலாடா உள்ளிட்ட ஷோக்களுக்கும் சில திரைப்படங்களுக்கும் நடன இயக்குநராக பணியாற்றி வந்த சாண்டி மாஸ்டருக்கு காலா படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரியோகிராஃப் செய்யும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது. காலா படத்தில் அட்டகாசமாக கொரியோகிராஃப் செய்து ரஜினியின் பாராட்டுக்களையும் அள்ளினார்.

பிக் பாஸ் சிஷ்யன்

பிக் பாஸ் சிஷ்யன்

கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர், பிக் பாஸை குருநாதா என அழைத்து அவருக்கு சிஷ்யன் ஆனார். பிக் பாஸ் பாய்ஸ் குரூப் என கவின், சாண்டி, முகேன் மற்றும் தர்ஷன் சேர்ந்து கொண்டு அடித்த அரட்டைகள் எல்லாம் இந்த சீசனில் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கின்றனர்.

ஹீரோவான சாண்டி

ஹீரோவான சாண்டி

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு புரமோஷனுக்கு கமல்ஹாசனுக்கு கொரியோகிராஃப் செய்தார் சாண்டி. சமீபத்தில், சாண்டி விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி பதிவிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், தற்போது சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கும் புதிய த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான டைட்டில்

வித்தியாசமான டைட்டில்

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்திற்கு 3:33 என வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். சூர்யாவின் படத்திற்கு 24 என முன்னதாக எண்ணில் டைட்டில் வைத்தனர். 13ம் நம்பர் வீடு, 12 பி, 13 பி, 7ஜி ரெயின்போ காலனி மற்றும் ஷங்கரின் 2.0 என ஏகப்பட்ட படங்கள் நம்பர் டைட்டிலை கொண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி வெளியிட்டார்

திகில் படமாக உருவாகி உள்ள சாண்டி மாஸ்டரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கலா மாஸ்டர் உள்ளிட்ட பிரபலங்கள் சாண்டியை வாழ்த்தி உள்ளனர். இயக்குநர் நம்பிக்கை சந்துரு இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

போன சீசனில் சாண்டியுடன் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குப் போன புஷ்பா புருஷன் காமெடி பிரபலம் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி ரசிகர்களை திணறவிட்டு வரும் ரேஷ்மாவும் சாண்டியும் எப்படி கலக்கப் போறாங்க என்பதை சீக்கிரம் பார்க்கலாம்.

More from Filmibeat

Read more about: sandy master சாண்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X