கேங்ஸ்டராக மாறும் சாண்டி …பஃர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : காலா உள்ளிட்ட மிகப்பெரிய பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள சாண்டி இப்பொழுது ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துவரும் சாண்டி இப்பொழுது கன்னடத்தில் கேங்ஸ்டர் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் சாண்டியின் இந்த கேங்க்ஸ்டர் திரைப்படத்திற்கு "ஹெட் புஸ்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.

நடன இயக்குனர்

நடன இயக்குனர்

பல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறும்புத்தனமான நடனத்தை வெளிக்காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சாண்டி இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில்

தனுஷ் நடிப்பில்

2014 ஆம் ஆண்டு வெளியான ஆஹா திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியதைத் தொடர்ந்து காலா, சண்டைக்கோழி 2, பரியேறும் பெருமாள், சர்வம் தாள மயம் என பல திரைப்படங்களுக்கு பணியாற்றி வந்த நிலையில் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் திரைப்படத்தில் இவர்தான் கோரியோகிராஃபி செய்து வருகிறார்.

கமல்ஹாசனை வேறு விதமாக

கமல்ஹாசனை வேறு விதமாக

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அட்டகாசமாக விளையாடிய ரசிகர்களின் பேராதரவுடன் ரன்னர் அப் வென்ற சாண்டி பிக்பாஸ் சீசன் 4 கோரியோகிராஃபராக நியமிக்கப்பட்டு கமல்ஹாசனை வேறு விதமாக காட்டி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அண்டர் வேர்ல்ட் டானாக

அண்டர் வேர்ல்ட் டானாக

நடனத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறந்து விளங்கும் சாண்டி இப்போது அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கிவரும் ஹாரர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வர அதைத்தொடர்ந்து கன்னடத்தில் உருவாகிவரும் கேங்ஸ்டர் திரைப்படத்தில் அண்டர் வேர்ல்ட் டானாக நடித்து வர இது 1980 களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கபடுவதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு "ஹெட் புஸ்" என டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

80களின் லுக்கில்

80களின் லுக்கில்

பெங்களூருவை கலக்கிய அண்டர்வேர்ல்ட் டானின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சாண்டி சாம்ஸன் கதாபாத்திரத்தில் நடிக்க தனஞ்செய் ஹீரோவாக நடிக்கிறார். 80களின் லுக்கில் அம்பாசிடர் கார் முன்னால் நீண்ட தாடியுடன் செம ஸ்டைலிஷாக சாண்டி நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கும் போஸ்டர் வெளியானதை அடுத்து இவரின் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. "ஹெட் புஸ்" திரைப்படம் கன்னடத்தை தொடர்ந்து தமிழ்,மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X