கமலின் விக்ரம் படத்தில் டான்ஸ் மாஸ்டர் யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: கமலின் விக்ரம் படத்தில் டான்ஸ் மாஸ்டராக பிக்பாஸ் பிரபலம் கமிட்டாகியுள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் டோலிவுட் என பல்வேறு சினிமாக்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் மற்றம் அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

மேலும் ஹாலிவுட் சினிமா தொடர்பான தகவல்களையும் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

 Sandy Master joins in Kamals Vikram movie

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நாக சைதன்யாவின் லவ் ஸ்டோரி படத்தின் வசூல் குறித்த தகவல், விஜய்யின் தளபதி 66 படம் மற்றும் விக்ரம் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

அதாவது சமந்தா - நாக சைதன்யா விவகாரத்து விவகாரம் ஒரு பக்கம் புகைந்து கொண்டிருக்க நாக சைதன்யா நடிப்பில் அண்மையில் லவ் ஸ்டோரி படம் வெளியானது. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்நிலையில் இப்படம் ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வசூலை குவித்ததாக கூறியுள்ளார் பிகே.

தற்போது நடிகர் விஜய் தளபதி 65 படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய் தளபதி 66 படத்திற்காக தெலுங்கு இயக்குநருடன் இணைந்துள்ள தகவலை கூறியுள்ளார் பிகே. இந்தப் படத்தை தில் ராஜா தயாரிக்கிறார்.

இதேபோல் கமலின் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடன இயக்குநராக சாண்டி மாஸ்டர் கமிட்டாகியுள்ள தகவலை கூறியுள்ளார் பிகே. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சாண்டி இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் என கூறியிருப்பதையும் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ள தகவலையும் கூறியுள்ளார்.

மேலும் ரத்ன சிவா இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் வா டீல். இந்தப் படத்தில் அருண் விஜய் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே. ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் மாநாடு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் 1983 படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. 1983 படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படம் இந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X