Sandy Master: லியோ மேஜக்கிற்காக காத்திருங்க.. சிக்ஸ் பேக்கில் கலக்கும் சாண்டி மாஸ்டர்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

Sandy Master posted his six packs picture in Instagram and quoted keep calm and wait for Lokis Magic

இந்நிலையில், இந்த இசை வெளியீடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை பகிர்ந்த லியோ பிரபலம்: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் லியோ படத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் இந்த இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த இசை வெளியீடு மதுரை, கோவை, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடக்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் கலந்து அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

படத்தின் ப்ரமோஷன்களும் கடந்த சில தினங்களாக மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தது. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட செய்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிளும் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீடு ரத்தானாலும் இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

படத்தில் விஜய், த்ரிஷாவுடன், கெதளம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இவர்களுடன் சாண்டி மாஸ்டர் மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் அவரது கெட்டப் குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். படத்தில் சிக்ஸ் பேக்குடன் அவர் மிரட்டலாக காணப்படுகிறார். மேலும் படத்தில் லோகேஷின் மேஜிக்கை பார்க்க அமைதியாக காத்திருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இதே பாணியில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் அதே பாணியில் சாண்டி மாஸ்டரும் தன்னுடைய சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று மாலை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் பேசாவிட்டால் என்ன படம் பேசும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X