போலீசாரைப் பார்த்து பதறி ஓடும் சாண்டி.. இதோ வீடியோ!!
சென்னை: லண்டனில் போலீஸாரைப் பார்த்து சாண்டி மாஸ்டர் பதுங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் பாடல்,வசனம்,சண்டைக்காட்சி போல நடனமும் தனி சிறப்பு மிக்கவை.நடனம் மூலம் பல ஹீரோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.அப்படிப்பட்ட நடனத்திற்கு பின்னால் ஒரு "டான்ஸ் மாஸ்டர்" கண்டிப்பாக இருப்பார்.

2005ல் "மானாட மயிலாட"நிகழ்ச்சியில் கொரியோகிராபர் ஆக அறிமுகமானார். பின்,2014ல் கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இதுவே இவரின் அபரிவிதமான வளர்ச்சியாகும்.
அதன் பின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணி புரிந்தார். ரஜினியின் காலா திரைப்படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியிலும் அவர் பங்கு பெற்றார்,மிகவும் பிரபலமானார். தற்போது சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

லண்டனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவர் லுங்கி கட்டிக்கொண்டு தெருவில் ஆட்டம் போடுகிறார். பின் போலீசை பார்த்ததும் தன் முகத்தை லுங்கியால் மூடிக்கொண்டு செல்கிறார்."அய்யோ போலீஸ்" என்று அந்த பதிவின் கீழ் குறிப்பிட்டுள்ளார். இந்த கலகலப்பு வீடியோவை பலரும் பார்த்து கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











