பாட்டிலை வைத்து ஆட்டம் காண்பித்த லோகேஷ்...வீடியோவை பாருங்க!

சென்னை : உலக நாயகன் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் பிக் பாஸ் பிரபலமான சாண்டி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர்களது கூட்டணியில் படம் சிறப்பாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 விக்ரம் படம்

விக்ரம் படம்

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்க்ததில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கமல் தயாரிப்பில் விக்ரம்

கமல் தயாரிப்பில் விக்ரம்

நடிகர் கமல் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து அவர் விலகிய சம்பவமும் நடைபெற்றது. தற்போது படத்தின் சூட்டிங், டப்பிங் பணிகள் உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியதன்மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக வெளிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து தற்போது உலக நாயகனை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை மிரட்டியது.

படத்தின் ரிலீஸ் தேதி

படத்தின் ரிலீஸ் தேதி

இதனிடையே இன்றைய தினம் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மேலும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது. எந்த இயக்குநருக்கும் கிடைக்காத பெருமையாக இதை கோலிவுட் பார்த்து வருகிறது. இதனிடையே லோகேஷிற்கு கமல்ஹாசன் வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார்.

சாண்டி வாழ்த்து

சாண்டி வாழ்த்து

இந்நிலையில் லோகேஷிற்கு படத்தின் நடன இயக்குநர் பிக் பாஸ் பிரபலம் சாண்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் லோகேஷின் பிரத்யேக திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் லோகேஷ் பாட்டிலை தூக்கி லாவகமாக அடித்து நேராக நிறுத்துகிறார்.

தேர்ந்த திறமை

இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி செய்கிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தேர்ந்த வகையில் இந்த பிராக்டீசை அவர் செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X