வார்த்தைக்கு வார்த்தை சிம்புவை தலன்னு கூப்பிட்ட சாண்டி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்.. அடுத்த சர்ச்சை!
சென்னை: வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சரத்குமார் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதே போன்றதொரு சம்பவம் நேற்று நடைபெற்ற பத்து தல இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறி உள்ளது.
தனுஷ் மற்றும் விஜய் பற்றி பேசிய வீடியோக்களை ஷோவில் வெளியிட்ட நிலையில், அஜித் பேசுவது போன்ற எந்தவொரு வீடியோவையும் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பவில்லை.
அதை விட நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பேசியது தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை
தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொல்லியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரத்குமாரை சுற்றி வளைத்து இதுதொடர்பாக கேள்விகள் கிளம்பின. ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்றும் விஜய் ஏன் அந்த பட்டத்திற்காக அலைகிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விளாசினர்.

பத்து தல ஆடியோ லாஞ்ச்
அதே நேரு ஸ்டேடியத்தில் நேற்று சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதே போன்றதொரு சர்ச்சையை சாண்டி மாஸ்டரின் பேச்சு கிளப்பி உள்ளது தற்போது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

சாண்டி மாஸ்டர்
பத்து தல இசை வெளியீட்டு விழாவில் சாண்டி மாஸ்டர் அரங்கத்தில் ஏறி சிம்பிளாக எல்லாருக்கும் நன்றி சொல்லி விட்டு கிளம்ப முடிவு செய்த நிலையில், விஜே ரம்யா வான்டட்டாக அவரை ஆட்டம் போட வைத்தார். சிம்புவுடன் சேர்ந்து அரங்கில் அதிரடியாக ஆட்டம் போட்ட சாண்டி அதன் பின்னர் சிம்பு பற்றி பேச ஆரம்பித்தார்.
வார்த்தைக்கு வார்த்தை தல
தலைவன் சிம்பு என பேச ஆரம்பித்த சாண்டி மாஸ்டர் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா என்பதற்காக சிம்புவை அடுத்தடுத்து தல என்றே அழைத்து பேச ஆரம்பித்தார். தொடர்ந்து தல தல என சிம்புவை சாண்டி மாஸ்டர் பேசியது அஜித் ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியது.

லிரிக்ஸ் சர்ச்சை
ஒத்த தலை சரியணும், பத்து தல ஒசரணும் என பத்து தல படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் கூட அஜித் ரசிகர்களை ரொம்பவே ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது. அஜித் ரசிகராக இருந்த சிம்பு சமீப காலமாக நடிகர் அஜித்தை அவாய்டு செய்கிறார் என்றும் தல டைட்டிலை அஜித் வேண்டாம் என கைவிட்ட நிலையில், அந்த டைட்டிலை தட்டித் தூக்க சிம்பு முடிவு செய்தது தான் சாண்டி மாஸ்டர் தல தல என பேசும் போது சிம்பு சந்தோஷமாக அதை ரசித்துக் கொண்டிருந்தார் என்றும் அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











