அலுங்காம… குலுங்காம… செம ஆட்டம் போட்ட சாண்டி மனைவி.. வைரல் வீடியோ !
சென்னை : நடன இயக்குனர் சாண்டியின் மனைவி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 மாத கர்ப்பினான இவர் நடனமாடிய வீடியோவை பார்த்து அனைவரும் வாய்பிளந்தனர்.
சமீபத்தில்தான் இவரது வீட்டில் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மானாட மயிலாட நிகழ்ச்சியில்
நடன இயக்குனர் கலா மாஸ்டரின் மாணவர் சாண்டி. இவர் திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மேலும் பல மேடை நிகழ்ச்கிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரிடம் உதவி நடன ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கிங்ஸ் ஆப் டான்ஸ்
இதையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும், கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

பிரபலமானார்
இதையடுத்தே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் இருந்த அனைவரையும் தனது நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்தார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு பெற்று இறுதிவரை பிக் பாஸ் இல்லத்தில் இருந்தார். அந்த சீசனில் முதல் இடத்தை முகேன் ராவும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றனர்.
டான்ஸ்
இந்நிலையில் சாண்டியின் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு வீட்டில் சிம்பிளாக வளைகாப்பு நடத்தப்பட்டது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் சண்டியின் மனைவி சில்வியா வயிற்றில் குழந்தையுடன் அலுங்காமல் குலுங்காமல் முக்கால முக்கால பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











