லுக்கில் மிரட்டும் சாண்டி மாஸ்டர்..லியோவில் பெரிய சம்பவம் காத்திருக்கு போல.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Leo Sandy Master (லியோ சாண்டி மாஸ்டர்) லியோ படத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டரின் லுக் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் லியோ வைபில் இருக்கிறது. பல பிரச்னைகள், விமர்சனங்களை தாண்டி படம் நாளை ரிலீஸாகவுள்ளது. விஜய்யை கொண்டு வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் இந்தப் படத்தின் ரிசல்ட் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் ரொம்பவே முக்கியமாக படுகிறது. லோகேஷ் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையும் தளபதி ரசிகர்களிடம் இருக்கிறது.

Sandy Masters new look from Leo is trending on the internet

திருவிழா நாள்: லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளிலிருந்து ஆரம்பித்த பிரச்னை தியேட்டர்வரைக்கும் நீண்டது. இன்று பிற்பகல்கூட லியோ படம் திரையிடப்படாது என்று ரோகிணி தியேட்டர் அறிவித்தது. ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ரோகிணி தியேட்டரின் ஓனர் ரேவந்த் லியோ திரைப்படம் ரோகிணியில் திரையிடப்படும் என அறிவித்திருந்தார்.

வசூல் சாதனை படைக்கும்: படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் போட்டிப்போட்டு டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். இதன் காரணமாக முதல் வாரத்தில் லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்க வாய்ப்பிருப்பதாக திரை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி 1000 கோடி ரூபாயை வசூலித்தாலும் எந்த ஆச்சரியமும் இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆச்சரியம்: அதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் லியோ ட்ரெய்லர் அமைந்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறினர். அதிலும் லோகேஷின் மேக்கிங், அவர் பிடித்திருக்கும் லொக்கேஷன் எல்லாம் அப்ளாஸை அள்ளும் என ரசிகர்கள் கணித்திருக்கின்றனர். மேலும் படம் வழக்கமான் ஆக்‌ஷன் கதைதான் என்றாலும் அதில் லோகேஷின் டச் கண்டிப்பாக இருக்கும் என்பதால் நம்பி படத்துக்கு செல்லலாம் என கூறிய ரசிகர்கள்; ட்ரெய்லரிலேயே பெரிய ஆச்சரியமாக அதன் ஓப்பனிங்கில் வந்த சாண்டி மாஸ்டர் ஈர்த்துவிட்டார் என்று சிலாகித்தனர்.

புது லுக்: ரசிகர்கள் கூறியதுபோல்தான் ட்ரெய்லர் ஓப்பனிங்கில் சாண்டி மாஸ்டரின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அட்டகாசமாக இருந்தது. சாண்டியை லோகேஷ் எப்படி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு அந்த ட்ரெய்லரில் சாண்டி மாஸ்டரின் சில நொடி அப்பியரன்ஸ் போதுமானதாகவே இருந்தது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்ர்.

அந்தப் புகைப்படத்தில் கையில் ரிவால்வருடன் டெவில் சிரிப்போடு நீல கண்களோடு காட்சியளிக்கிறார். மேலும் அந்தப் படத்துக்கு கேப்ஷனாக Keep calm and wait for Chocolate Coffee என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் புகைப்படம் இணையத்தில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது. லியோவில் சாண்டி மாஸ்டர் என்ன மாதிரியான சம்பவம் செய்திருக்கிறாரோ நாளை தெரிந்துவிடும்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X