திரும்பவும் கதவை திறந்து வைத்துக் கொண்டு ‘சூச்சூ’.. போட்டோ போட்டு சாண்டியை அசிங்கப்படுத்திய கவின்!

மீண்டும் பாத்ரூம் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சாண்டி சிறுநீர் கழித்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil : அசிங்கமா பண்ணாத சாண்டி- Cheran-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட மாதிரியே, மீண்டும் பாத்ரூம் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சாண்டி சிறுநீர் கழித்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் தங்களது நண்பர்களான சக போட்டியாளர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்கி வருகின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பாத்ரூமில் சாண்டி

பாத்ரூமில் சாண்டி

முன்பிருந்த ரசிகர்களைவிட பிக் பாஸ் மூலம் தற்போது போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டதால், அந்தப் புகைப்படங்கள் சுலபமாக இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அப்படித்தான் பாத்ரூம் ஒன்றில் சாண்டி நிற்பது போன்ற புகைப்படமும் தற்போது வைரலாகி இருக்கிறது.

திருந்தவே இல்லையா

திருந்தவே இல்லையா

அந்தப் புகைப்படத்தைப் பார்த்து, ‘என்ன சாண்டி இன்னமும் நீங்க திருந்தவே இல்லையா?' என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அப்படி என்ன புகைப்படம் அது எனக் கேட்கிறீர்களா? அதாவது, பாத்ரூம் ஒன்றில் சாண்டி சிறுநீர் கழிப்பதைப் பின்புறம் இருந்து கவின் புகைப்படமாக எடுத்துள்ளார்.

பதிவிட்ட கவின்

பதிவிட்ட கவின்

இந்தப் புகைப்படத்தை முதலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவின் தான் வெளியிட்டிருந்தார். பிறகு உடனடியாக அதனை நீக்கி விட்டார். ஆனால் ரசிகர்கள் லேசுபட்டவர்களா, அவர் டெலிட் செய்வதற்கு முன்னரே அதை ஸ்கீர்ன் ஷாட் எடுத்து விட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் வீட்டில்

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும், இதே போல் தங்கமுட்டை டாஸ்க்கின் போது நடந்து கொண்டு சர்ச்சையில் சிக்கினார் சாண்டி. பெண் போட்டியாளர்கள் தோட்டப் பகுதியில் அமர்ந்திருக்கும் போது, சாண்டி இப்படி நடந்து கொண்டது சரியில்லை என சேரன் அவரைக் கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X