கல்யாணம் கேன்சல் ஆயிடுச்சு.. பார்ட்டி பண்ணி கொண்டாடிய சாண்டியின் முன்னாள் மனைவி.. வைரலாகும் போட்டோ!

சென்னை: தனது திருமணம் நின்று போனதை சாண்டியின் முன்னாள் மனைவியான நடிகை காஜல் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் காஜல்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் நர்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல்.

காஜல் படங்கள்

காஜல் படங்கள்

தொடர்ந்து ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம் , கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மவுன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரித்தில் இருவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சாண்டியுடன் திருமணம்

சாண்டியுடன் திருமணம்

கடைசியாக கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார். காஜல் டான்ஸ் மாஸ்டரான சாண்டியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர்.

இரண்டாவது கர்ப்பம்

இரண்டாவது கர்ப்பம்

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சாண்டியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

குழந்தைகளை தத்தெடுத்து

குழந்தைகளை தத்தெடுத்து

அவரது வளைக்காப்பு போட்டோக்கள் அண்மையில் வெளியானது. ஆனால் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

சாண்டிக்கு ஆதரவு

சாண்டிக்கு ஆதரவு

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற காஜல், சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டிக்கு ஆதரவாக அப்போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

தப்பா எடுத்துக்காதீங்க

தப்பா எடுத்துக்காதீங்க

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. என பதிவிட்டார்.

திருமணம் நின்றுவிட்டது

திருமணம் நின்றுவிட்டது

காஜல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாரான தகவல்கள் பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்நிலையில் தனது திருமணம் நின்று விட்டதாக நடிகை காஜல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தோழிகளுடன் பார்ட்டி

தோழிகளுடன் பார்ட்டி

மேலும் தனது திருமணம் நின்றதை தோழிகளுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் காஜல். தனது தோழிகள் இருவருடன் எடுத்த போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள காஜல், My cancelled wedding party என அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

மதுவுடன் பார்ட்டி

மதுவுடன் பார்ட்டி

இதனை பார்த்த ரசிகர்கள், மதுவுக்கு எதிராக மக்கள் போராடும் வேளையில் நீங்கள் மதுவுடன் பார்ட்டி கொண்டாடி அதனை தயக்கமின்றி பொதுவெளியில் பரப்புவது தவறானதாகும்.. என பதிவிட்டு வருகின்றனர். சிலர் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நிறுத்தம் என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X