பிக்பாஸ் வீட்டில் முன்னாள் கணவர் அழுததை பார்த்து கண்ணீர்விட்ட நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி தனது மகளை நினைத்து அழுததை பார்த்து அவரது முன்னாள் மனைவியான காஜலும் கண்ணீர் விட்டுள்ளார்.
காஜல் பசுபதி தமிழில் கோ, வசூல்ராஜா எம்பிபிஎஸ், மவுன குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநரான சாண்டியை காதல் திருமணம் புரிந்தார்.
ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து செய்துக்கொண்டனர். கடந்த ஆண்டு சாண்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸில் சாண்டி
அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சாண்டி.

சாண்டிக்கு பிறந்தநாள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை யாருடைய மனதையும் புண்படுத்தாமல் அவ்வப்போது காமெடி செய்து என்டெர்டெய்னாராக உள்ளார் சாண்டி. நேற்று சாண்டிக்கு பிறந்த நாள்.

அழத் தொடங்கிய சாண்டி
இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் ரிங்டோனான அவரது குழந்தையின் அழு குரல் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அதை கேட்ட சாண்டி அழத் தொடங்கிவிட்டார்.

குழந்தை வீடியோ
இதைத்தொடர்ந்து சாண்டிக்கு அவரது குழந்தையின் போட்டோ பதியப்பட்ட தலையணை பரிசாக கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் கேக் வெட்டப்பட்டது. பின்னர் அங்குள்ள டிவியில் சாண்டியின் குழந்தை வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

கண்ணீர் விட்ட ஹவுஸ்மேட்ஸ்
இதனை பார்த்து கதறி அழுதார் சாண்டி. இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த அப்பா ஃபீலிங்ஸ் பிள்ளைகளான மதுமிதா, லாஸ்லியாவும் அழுதனர். அப்பாக்களான சேரன், சரவணன் ஆகியோரும் கலங்கினர். ஃபாத்திமா பாபுவும் கண்ணீர்விட்டார்.
கண்ணீர் விட்ட முன்னாள் மனைவி
இதுநாள் வரை அனைவரையும் சிரிக்க வைத்த சாண்டி நேற்று அனைவரையும் அழ வைத்து விட்டார். சாண்டி அழுவதை டிவியில் பார்த்த அவரது முன்னாள் மனைவியான காஜல் அவர் அழும் வீடியோவை பதிவிட்டு தானும் கண்ணீர் வடிப்பதை ஈமோஜி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











