பிக்பாஸ் வீட்டில் சாண்டி.. முன்னாள் மனைவி காஜல் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சாண்டி குறித்து அவரது முன்னாள் மனைவியான காஜல் டிவிட்டியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் காஜல். நிகழ்ச்சி தொகுப்பாளரான காஜல் கோ, மவுன குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடன இயக்குநர் சாண்டியை காதல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

பிக்பாஸ் சீசன் 3ல் சாண்டி
இதைத்தொடர்ந்து சாண்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

முன்னாள் மனைவி ட்டிவிட்
எப்போதும் சென்னை தமிழில் பேச்சு, ஆட்டம் பாட்டம் கலாய் என ஒரே ஜாலி மூடில் இருக்கிறார் சாண்டி. இந்நிலையில் சாண்டி குறித்து அவரது முன்னாள் மனைவியான காஜல் டிவிட்டியுள்ளார்.
எப்போதும் நேசிக்கிறேன்
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சாண்டியின் நகைச்சுவை உணர்வை நான் எப்போதும் நேசிக்கிறேன். அவர் அவராகவே அங்கு உள்ளார் என பதிவிட்டுள்ளார் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி.

வீடியோக்களை ஷேர் செய்யும் காஜல்
சாண்டி பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றது முதல் காஜல் தொடர்ந்து அவர் குறித்து டிவிட்டி வருகிறார். அவரது டான்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











