கமல்ஹாசனுக்கு நடனம் கற்றுக் கொடுத்த சாண்டி... வைரலாகும் சூடான புகைப்படங்கள் !
சென்னை : நடன இயக்குனர் சாண்டி உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நடனம் கற்றுக் கொடுத்த புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் கமல்ஹாசன், மக்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4-யும் தொகுத்து வழங்க உள்ளார்.
தனது மயக்கும் பேச்சின் மூலம் இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இப்பொழுது நான்காம் சீசனுக்கு தயாராகி வரும் நிலையில் அதன் ப்ரோமோ இப்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது.

தகுந்த பாதுகாப்புடன்
சென்ற ஆண்டு இந்நேரம் பிக்பாஸ் பற்றிய பல்வேறு தகவல்களும் சூடான செய்திகளும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கொரானா நோய்த்தொற்று காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் தகுந்த பாதுகாப்புடன் சற்று மந்தமான நிலையிலேயே உருவாக காரணமாக இருக்கின்றது.

இரண்டாவது ப்ரோமோ
பிக்பாஸ் தெலுங்கு சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், தமிழ் பிக் பாஸ் எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் கொரானா விழிப்புணர்வுடன் கமல்ஹாசன் வெளியிட்ட முதல் ப்ரோமோ பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது இந்நிலையில் இப்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமல்ஹாசனின் நடனத்துடன்
செம ஸ்டைலிஷாக கோட்டு சூட்டுடன் முறுக்கிய மீசை என இதுவரை கண்ட பிக் பாஸ் தமிழ் ப்ரோமோக்களிலேயே மிகச்சிறந்த ப்ரோமோவாக சமீபத்தில் கமல்ஹாசனின் நடனத்துடன் வெளியான வித்தியாசமான ப்ரோமோ காட்சிகள் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருந்தது.

தனது பாணியில் கோரியோகிராபி
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்குகொண்ட சாண்டி, இந்த ப்ரோமோவுக்கு கோரியோகிராபி செய்திருக்கும் நிலையில், வீடியோவின் ஆரம்பத்தில் வரும் நடனத்திற்கு சாண்டி தனது பாணியில் சூப்பரான கோரியோகிராபி செய்து அசத்தியுள்ளார்.

ரசிகர்களின் பாராட்டுக்களை
ப்ரோமோவின் ஆரம்பமே அமர்க்களமாக நடனத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த நடனம் கலந்த தனது தனித்துவமான கோரியோகிராபி மூலம் இயக்கியிருந்த சாண்டி இப்பொழுது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திரைப்படங்களுக்கு கோரியோகிராபி
சாண்டி இதுவரை பல்வேறு திரைப்படங்களுக்கு கோரியோகிராபி செய்திருக்கும் நிலையில், தமிழ் ரசிகர்கள் அனைவரும் ரசித்த இந்த பிக் பாஸ் ப்ரோமோவுக்கு கமல்ஹாசனுக்கு நடனம் கற்றுதரும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "சிக்கு புக்கு சிக்கு புக்கு பிக்பாஸ்" என பூரித்துப் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











