17 வயதில் சாதிச்சேன்.. ஆனால் திடீரென வாழ்க்கையே போச்சு.. நடிகை விந்தியா கடந்து வந்த பாதை!

சென்னை: நடிகர் ரகுமான் கதாநாயகனாக நடித்த சங்கமம் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் விந்தியா. இவர் நடிகையாக மட்டுமில்லாமல், அதிமுக கட்சியில் இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார்.இவர், தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.

1999ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சங்கமம். இப்படத்தில் ரகுமான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார், ஸ்ரீவித்யா, வடிவேலு, ராதா ரவி என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். அவரின் இசையில் அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் இன்றளவிற்கும் அனைவருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை விந்தியாவிற்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

vindhya interview sangamam

நடிகை விந்தியா பேட்டி: இவர் நடிகை என்பதையும் தாண்டி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார். தற்போது அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ள நடிகை விந்தியா, தன்னுடைய திரையுலக பயணம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிதாக ஆசைப்படவில்லை. அம்மா சொன்னார்கள் அதற்காக நடித்தேன். நான் சங்கமம் படத்திற்காக முதன் முதலில் வாங்கிய சம்பளம் ஒரு லட்சம் ரூபாய். அதை என் அம்மாவிடம் தான் கொடுத்தேன். அதன் பிறகு அடுத்தடுத்த படத்தில் நடித்தேன்.

வாழ்க்கையே போச்சு: ஆனால், அதன் பின் வாழ்க்கையில் பெரிய கஷ்டத்தை சந்தித்தேன். நான் என் 17 வயதிலேயே சங்கமம் படத்தில் கதாநாயகியாக நடித்தேன். முதல் படத்திலேயே பெயர், புகழ் என பெரிய அளவில் சாதித்தேன். ஆனால், 2008ம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு வந்தது. வாழ்க்கையிலேயே ரொம்ப மோசமான கருப்பு நாட்கள் என்று அந்த நாட்களை சொல்லலாம். ரொம்ப குண்டாகிவிட்டேன், இதனால் இனிமே நமக்கு வாழ்க்கை இல்லை, 17 வயதிலேயே சினிமவந்ததால் படிப்பும் இல்லை.

அப்போது தான் அரசியலுக்கு வந்தேன். ஆனால், எனக்கு பேசத்தெரியாது, மற்ற நடிகைகளைப் போல நானும் இரண்டு விரல்களை காட்டி பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது தான் ஜெயலலிதா அம்மா என்னை அழைத்துபேசி என்னால எல்லாம் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொடுத்தார்கள். இதனால், என் அம்மாவிற்கு மேல நான் அவர்களை உயிராக பார்க்கிறேன் என்று அந்த பேட்டியில் விந்தியா பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X