சங்கமித்ரா படத்தை மீண்டும் தொடங்கும் பணியில் படக்குழு!

சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி கதை களத்தில் உருவானவை

ஆனால் முதல் முறையாக சரித்திர திரைப்படம் ஒன்றை சுந்தர் சி இயக்குகிறார். அந்த படத்திற்கு சங்கமித்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி யின் கனவு திரைப்படமான இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த நிலையில் பொருளாதார பிரச்சினை காரணமாக திடீரென நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் துவங்க படக்குழு தயாராகி வருகிறது.

குடும்பம் குடும்பமாக ரசிகர்கள்

குடும்பம் குடும்பமாக ரசிகர்கள்

இயக்குநர் சுந்தர் சி திரைப்படங்கள் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.குறிப்பாக இவரின் திரைப்படங்களில் இடம்பெறும் காமெடிக்காக குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து கண்டு ரசிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 3 மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அரண்மனை 1ன் வெற்றியைத் தொடர்ந்து அதன் பாகம் 2 வெற்றி பெற தற்போது 3வது பாகத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றுள்ளார் சுந்தர் சி.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

பெரும்பாலும் காமெடிப் படங்களை இயக்கி வந்த சுந்தர் சிக்கு கனவு திரைப்படமாக சங்கமித்ரா இருந்து வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் சரித்திரப் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன், ஆர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரலாற்று கதை களத்தை கொண்டு உருவாகும் இந்த படம் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மிக பிரம்மாண்ட திரைப்படம் என கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்

இந்த நிலையில் சங்கமித்ரா பட பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனைத்து பணிகளும் குறித்து வைத்தது போல நடைபெற்றுக் கொண்டிருக்க திடீரென பணப் பிரச்சினை காரணமாக தேனாண்டாள் நிறுவனம் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் நிறுத்தி வைத்திருந்தது.

சங்கமித்ரா படத்தை மீண்டும் தொடங்க

சங்கமித்ரா படத்தை மீண்டும் தொடங்க

பாகுபலி, கேஜிஎஃப்,பொன்னியின் செல்வன் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இணையாக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராக உள்ள சங்கமித்ரா பட பணிகளை மீண்டும் படக்குழு தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இயக்குனர் சுந்தர் சியும் இப்பொழுது தன்னுடைய காமெடி படங்களில் இருந்து பிரமாண்ட படங்களை நோக்கி இயக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான அரண்மனை 3 படத்திலும் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சுந்தர் சி யின் அடுத்த குறிக்கோளாக உள்ள சங்கமித்ரா தமிழ் சினிமாவில் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்பட பட்டியலில் இடம்பெறவுள்ளது. இதுகுறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X