»   »  மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம்: சுந்தர் சி.யை அதிர வைத்த தயாரிப்பாளர்

மார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம்: சுந்தர் சி.யை அதிர வைத்த தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக போட வேண்டாம் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் படம் சங்கமித்ரா என்று அறிவிக்கப்பட்டது. படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். விஜய், சூர்யா ஆகியோரை ஹீரோவாக நடிக்க கேட்க அவர்கள் மறுத்துவிட்டனர்.


அதன் பிறகு ஜெயம் ரவி, ஆர்யாவை ஒப்பந்தம் செய்தனர்.


ஹன்சிகா

ஹன்சிகா

படத்தில் சங்கமித்ரா எனும் இளவரசியாக நடிக்க ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்தார்கள். வாள் சண்டை எல்லாம் கற்ற நிலையில் ஸ்ருதி படத்தில் இருந்து விலகினார்.


ஹன்சிகா

ஹன்சிகா

ஸ்ருதி விலகிய பிறகு சங்கமித்ராவாக நடிக்க ஹன்சிகாவை தேர்வு செய்தாராம் சுந்தர் சி. ஹன்சிகாவுக்கு மார்க்கெட்டே இல்லை, அவரை போய் ஹீரோயினாக போட முடியாது என்று கூறிவிட்டதாம் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.
சங்கமித்ரா

சங்கமித்ரா

மார்க்கெட் இல்லாத ஹன்சிகாவை நடிக்க வைத்தால் யாரும் படத்தை வாங்க முன் வர மாட்டார்கள் என்று தயாரிப்பாளர் கறாராக கூறிவிட்டாராம். இதையடுத்து புதிய ஹீரோயினை தேடும் பணி நடந்து வருகிறதாம்.


பட்ஜெட்

பட்ஜெட்

பல கோடி பட்ஜெட் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் முன்னணி ஹீரோக்கள் யாரும் நடிக்காததால் பட்ஜெட்டை பாதிக்கும் மேல் குறைத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.
English summary
Sri Thenandal films has reportedly rejected Hansika for Sangamithra to be directed by Sundar C.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil