Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நவம்பர் 15 அன்று வெற்றிநடை போட்டு வரவிருக்கிறான் சங்கத்தமிழன்
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.
'மக்கள் செல்வன் ' விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இளம் இசையமைப்பாளர்களான விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , படத்தொகுப்பினை பிரவீன் K.L மேற்கொண்டுள்ளார் . சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளார் அனல் அரசு.
ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம்.. கமல் ஓபன் டாக்!
இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 'லிப்ரா புரடொக்க்ஷன்ஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது . வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது சங்கத்தமிழன்.