தறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்!

Recommended Video

தனுஷின் கர்ணனுக்கு தடை | SANGATHALAIVAN AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

சென்னை : தறி எனும் நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன் என்று இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் பேசினார்.

நடிகர் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியாக போகும் படம் தான் சங்கத்தலைவன். இந்த படத்தை உதயகுமார் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை இயக்கியிருக்கிறார் மணிமாறன். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் ராபர்ட் சற்குணம் .

Sangathalaivan movie Audio launch karunas speech

சங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் படத்தை பற்றிய தங்கள் கருத்துகளை நேற்று பகிர்ந்து இருந்தனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் மற்றும் சங்கத்தலைவன் தயாரிப்பாளரான வெற்றிமாறன், படத்தில் கதை கேட்ட பின் கட்டாயம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது பின் உதய் புரொடக்ஷ்னுடன் இணைந்து படத்தை தயாரித்தேன் என கூறினார் .

சமுத்திரகனி இல்லையென்றால் இந்த படம் இல்லை என பலரும் கூறினார்கள். இந்த கதை இயக்குனர் மணிமாறனால் உறுதி செய்யபட்ட பின் சத்யராஜ் அல்லது சமுத்திரகனி நடிக்க சம்மதித்தால் மட்டுமே படத்தை எடுக்க போகிறோம் என கூறப்பட்டது. ஆனால் சமுத்திரகனி ஒத்து கொண்டதால் படம் தற்போது வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது என கூறப்பட்டது .

Sangathalaivan movie Audio launch karunas speech

விழாவில் பேசிய கருணாஸ் 4 வருடங்களுக்கு பின்பு பட விழாக்களில் கலந்து கொண்டது. கடந்த சில வருடங்களாக படங்கள் எதிலும் நடிக்கவும் இல்லை பட விழாக்களில் பங்கு கொள்ளவும் இல்லை. பல வருடங்கள் கழித்து சங்கத்தலைவன் படத்தில் நடித்து இருக்கிறேன் என்றார்.

மேலும் சங்கத்தலைவன் படம் தறி எனும் நாவலில் இருந்து படமாக்கபட்டிருக்கிறது என கருணாஸ் கூறினார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் மணிமாறனை எனக்கு பல வருடங்களாக தெரியும் என கூறியுள்ளார் . இயக்குனர்கள் மணிமாறன் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பாலு மஹேந்திராவின் உதவி இயக்குனர்கள். இவர்கள் இருவரும் படத்தின் டிஸ்கஷன் நேரங்களில் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.

நான் அதை பார்த்து எல்லாம் என்னடா இப்படி சண்டை போடுகிறார்களே நினைத்ததுண்டு. ஆனால் ஒரு நல்ல கதைக்காக சண்டையிடுவது தப்பில்லை என பிறகு உணர்ந்தேன் என கருணாஸ் கூறினார்.

வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ஒரு சிறிய படத்தை இயக்கி வருகிறார் அதன் பின் வாடிவாசல் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது நடிகர் கருணாஸ் இந்த படத்தையடுத்து திரௌபதி படத்தில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X