ஹீரோயினா நடிக்கிறேன்.. அவரால் தான் இந்த வாய்ப்பு.. விஜே .ரம்யா மகிழ்ச்சி!
சென்னை : சங்கத்தலைவன் படத்தில் நான், கதாநாயகியாக நடிக்கிறேன். இந்த வாய்ப்பு ஒளிப்பதிவாளர் வேல்ராஜாவால் தான் எனக்கு கிடைத்த என்று விஜே .ரம்யா மகிழ்ச்சி உடன் கூறினார்.
நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்து இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் சங்கத்தலைவன். இந்த படத்தை உதய் புரொடக்ஷ்னுடன் இணைந்து வெற்றிமாறனும் தயாரித்து இருக்கிறார். படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்து இருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜே.ரம்யா படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது விஜே.ரம்யாவுக்கு கிடைக்கும் முதல் நாயகி வாய்ப்பாகும். இவர் தொகுப்பாளினி மற்றும் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் .
ரம்யா பேசும் போது இது எனக்கு மிக முக்கியமான படம் என்றார். இந்த படத்தில் தான் எதிர்காலம் இருக்கிறது என்றும் கூறினார். இந்த படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மூலம் தான் கிடைத்தது என கூறினார். வேல்ராஜ் உதவி செய்து தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்ற ரம்யா வேல்ராஜிற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

இந்த படத்தில் ரம்யா கிராமத்து பெண்ணாகவும் ஒரு பிள்ளைக்கு தாயாகவும் நடித்திருக்கிறாராம். இந்த படத்திற்காக ரம்யா கருப்பாக வேண்டுமா என இயக்குனரை அணுகி கேட்ட போது, வேண்டாம் இப்படியே படத்தில் நடிக்க வாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். மேலும் நடிகர் கருணாசும் உங்களை விட வெள்ளையான கிராமத்து பெண்களை நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் கருப்பாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார் என விழாவில் ரம்யா கூறினார்.

மேலும் சமுத்திரகனியை தான் அண்ணனாக பார்கிறேன் அதே போல சமுத்திரகனியும் என்னை தங்கையாக பார்க்கிறார். அவருக்கு மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன், அண்ணன் தங்கை என்று நாங்கள் மாற்றி மாற்றி கூற இயக்குனர் குழம்பி போனார் என ரம்யா பகிர்ந்து கொண்டார்.
சங்கத்தலைவன் படம் தறி எனும் நாவலை தழுவி எடுக்கபட்டுள்ள படம். இந்த படத்தை வெற்றிமாறன் மற்றும் உதய்குமார் தயாரித்து இருக்கிறார். படத்தில் சமுத்திரகனி, ரம்யா, சுனு லஷ்மி மற்றும் கருணாஸ் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











